வறட்சி மாவட்டங்கள் குறித்து ஆலோசனை தலைமை செயலகத்தில் நாளை கூட்டம்

Added : பிப் 16, 2013 | |
Advertisement
வறட்சி மாவட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கவும், நிவாரணம் வழங்கவும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, திங்களன்று தலைமைச் செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.தமிழகத்தில் இந்தாண்டில், வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால், உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் ஏற்பட்ட இழப்பை

வறட்சி மாவட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கவும், நிவாரணம் வழங்கவும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, திங்களன்று தலைமைச் செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் இந்தாண்டில், வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால், உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, கர்நாடக அரசு மீது தமிழக அரசு சிவில் வழக்கு தொடரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.ஒருபுறம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், டெல்டா மாவட்டத்தில் பயிர் பாதிப்பு ஏற்பட்டதால், வாடி வரும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு,15 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை முதல்வர் அறிவித்தார். அத்துடன், சென்னையைத் தவிர மற்ற, 31 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, நிலவரியையும் ரத்து செய்தார்.

மேலும், பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட, மற்ற மாவட்டங்களில் பயிர் பாதிப்புகுறித்து ஆய்வு செய்ய, உயர் மட்டக்குழு அனுப்பப்படும் என்றும் அறிவித்தார். தொடர்ந்து, நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் விரைவில், தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.
இந்நிலையில், பயிர் பாதிப்பு ஆய்வு செய்யவுள்ள, உயர்மட்டக்குழுவினர், அதன் தலைவர் அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஆய்வு செய்யப்பட வேண்டிய இடங்கள் குறித்த, விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் பின் ஆய்வுக்கு செல்கின்றனர்.

- நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X