Nagaland and Meghalaya to vote today | நாகாலாந்து, மேகாலயாவில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாகாலாந்து, மேகாலயாவில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Updated : பிப் 23, 2013 | Added : பிப் 23, 2013 | கருத்துகள் (1)
Advertisement
Nagaland ,Meghalaya, to vote, today,நாகாலாந்து, மேகாலயாவில், சட்டமன்ற, தேர்தலுக்கான, ஓட்டுப்பதிவு,துவங்கியது

புதுடில்லி : நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் முறையே 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.


நாகாலாந்து தேர்தல் :

60 இடங்களுக்கான நாகாலாந்து தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மரணத்தால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ஜெ.ஆலம் தெரிவித்துள்ளார். தற்போது நாகாலாந்தில் 59 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாகாலாந்து தேர்தலுக்காக சுமார் 250 கம்பெனிகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட போலீசாரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் ஆளும் இடசாரிகளுக்கும், காங்கிரசிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியினர் ஹெலிகாப்டர்களில் வந்து வாக்காளர்களுக்கு பணம் ‌தருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான ஊழல்களில் ஆளும்கட்சி ஈடுபட்டதாகவும் காங்கிரசார் குற்றம் சாட்டி உள்ளனர். 10 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இம்மாநிலத்தில் 188 பேர் போட்டியிடுகின்றனர்.


மேகாலயா தேர்தல் :

தேசிய விடுதலை கூட்டமைப்பு தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்த போதிலும் மக்கள் எவ்வித பயமும் இன்றி தைரியமாக வந்து வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மேகாலயா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் 7 மாவட்டங்களில் 36 மணி நேர ப்ந்திற்கு தேசிய விடுதலை கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேகாலயாவில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கும், ஐக்கிய ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சங்மாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெற்ற தோல்வி பதலளிக்கும் விதமாக இந்த தேர்தல் வெற்றி அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தேர்லில் சங்மாவின் மகனும், சங்மாவின் சகோதரரும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 25 பெண்கள் உட்பட 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள நாட்டின் ஒரு சில மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்கு 744,299 ஆண் வாக்காளர்களும், 759,608 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 2845 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 900 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் வங்கதேச எல்லை பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-பிப்-201309:39:39 IST Report Abuse
villupuram jeevithan Hitler, Frankenstein, Mafia, Bomber, Kennedy, Alexander: இவர்கள் எல்லாம் யார் என்று நினைக்கின்றீர்கள்? இவர்கள் மேகாலயாவில் தேர்தலில் நிற்கும் 346 வேட்பாளர்களில் சிலர். இதில் Hitler, Frankenstein ஏற்கனவே மந்திரிகளாய் இருந்தவர்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X