acid attack:vidya dead in chennai | ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு

Updated : பிப் 24, 2013 | Added : பிப் 24, 2013 | கருத்துகள் (77)
Advertisement
ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு

சென்னை:சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையி்ல் சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாணவி விநோதினி கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா உயிரிழந்‌துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்‌க்கை 2 ஆக அதி்கரித்துள்ளது. விஜயபாஸ்கர் தற்போது சிறையில் உள்ளார்.

வினோதினி:காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் வினோதினி என்ற இளம் பெண், மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்‌‌தார். வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டது.பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.,12 ஆம் தேதி மரணமடைந்தார்.தற்போது வித்யாவும் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran - Palani,இந்தியா
25-பிப்-201321:07:58 IST Report Abuse
Eswaran இளைஞர்களே யுவதிகளே,காதல் என்பது நமது எதிர் கால வாழ்வையும் குடும்ப மானத்தயும் பாதிக்கக் கூடியது.இதனால் பெரும் பாலானவர்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டுத்தான் அலைகின்றனர்.காதலில் முதிர்ச்சி என்பதெல்லாம் வெறும் ஹம்பக் .வெறும் உணர்ச்சியால் தூண்டப்பட்டு நடை பெறுகின்ற ஒரு பொழுது போக்கு. இதை விடுத்து வாழ்க்கையில் எத்தனையோ முக்கிய வேலைகள் உள்ளன . அதைப் பாருங்கள் . நீங்களும் முன்னேறுங்கள் நமது நாட்டையும் முன்னேற்றுங்கள். ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
B Vijay Anand - Ooty,இந்தியா
25-பிப்-201317:59:36 IST Report Abuse
B Vijay Anand RIP வித்யா. சதீஸ்'கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த பெண் செய்த தவறு காற்றில் கரைந்து போய்விட்டது. சதீஸ் 'ன் கோபம் மட்டற்ற இழந்கர்களுக்கு ஓர் பாடம். வேண்டாம் இந்த பதாக செயல்கள்.
Rate this:
Share this comment
Cancel
D.Selvaraj - Tirunelveli,இந்தியா
25-பிப்-201310:30:16 IST Report Abuse
D.Selvaraj நண்பர்களே தயவு செய்து இம்மாதிரியான வெறிசெயல்களில் ஈடுபடாதீர்கள். உங்கள் வீட்டிலும் பெண்கள் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X