cell phone disconnect L trai new rules | மொபைல் போன் இணைப்பு துண்டிப்புவிதிமுறையில், "டிராய்' அதிரடி மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மொபைல் போன் இணைப்பு துண்டிப்புவிதிமுறையில், "டிராய்' அதிரடி மாற்றம்

Updated : பிப் 24, 2013 | Added : பிப் 24, 2013 | கருத்துகள் (14)
Advertisement
மொபைல் போன் இணைப்பு துண்டிப்புவிதிமுறையில், "டிராய்' அதிரடி மாற்றம்

புதுடில்லி: "மொபைல் பிரீ - பெய்டு சந்தாதாரர்களின், பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளை, 20 ரூபாய்க்கு மேல் இருப்பில் இல்லை என்பதற்காக, துண்டிக்க கூடாது' என, டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு, "டிராய்' உத்தரவிட்டுள்ளது. மேலும், செயல்படாமல் இருப்பதற்கான காலத்தை, 90 நாட்களாக நிர்ணயித்துள்ளது. மொபைல் போன், பிரீ - பெய்டு சந்தாதாரர்கள், 20 கோடி பேரின் இணைப்புகள், சராசரியாக, 6 ரூபாய் இருப்புடன், 30 நாட்களாக செயல்படாமல் இருந்ததற்காக, துண்டிக்கப்பட்டது.

இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட, "டிராய்' என்ற மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், மொபைல் போன், பிரீ - பெய்டு சந்தாதாரர்களை, மகிழ்விக்கும் வகையில், புதிதாக விதிமுறைகளை மாற்றியுள்ளது.

டிராயின் புதிய விதிமுறைகள் வருமாறு:


செயல்படாமல் உள்ள பிரீ - பெய்டு இணைப்புகளில், 20 ரூபாய்க்கு மேல் இருப்பு இல்லை என்பதற்காக, இணைப்பை துண்டிக்க கூடாது. செயல்படாமல் இருப்பதற்கான காலத்தை, 90 நாட்கள் வரை அனுமதிக்கலாம்.


அதே போல், செயல்படாமல் உள்ள, 90 நாட்களில், இருப்பில் உள்ள தொகையில் இருந்து மாதந்தோறும், 20 ரூபாய்க்கு மிகாமல் கழித்து கொள்ளலாம். இருப்பு தொகை, 20 ரூபாய்க்கு கீழ் செல்லாதவரை இருக்க வேண்டும்.


மேலும், 90 நாட்கள் கழித்து, இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில், அதே மொபைல் போன்


நம்பரை இழக்காமல் இருப்பதற்கு, இணைப்பு துண்டிக்கப்பட்ட நாளில் இருந்து, 15 நாட்களுக்குள், இணைப்பை மீண்டும் செயல்படுத்த சலுகை காலம் வழங்கலாம். இதற்கு குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கலாம்.


"போஸ்ட் பெய்டு' சந்தாதாரர்களுக்கு, இணைப்பை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர, 90 நாட்கள் சலுகை அளிக்கலாம்; கட்டணமாக, 150 ரூபாய் வசூலிக்கலாம்இவ்வாறு, புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள், அடுத்த மாதம், 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
soundararajan - Udumalaipettai,இந்தியா
26-பிப்-201303:58:20 IST Report Abuse
soundararajan ஒவ்வொரு தொலை தொடர்பு நிறுவனமும், ஒவ்வொரு விதமாக தங்களுக்கு வேண்டியவிதத்தில், பயன்படுத்தி கொள்கிறார்கள். வோடபோன் 45 நாட்கள், BSNL 90 நாட்கள் ( அதிலும் ஒருசில ப்ளானில், மீண்டும் ரி-சார்ஜ் செய்கின்ற பணத்திற்கு talktime கிடையாது. அது வெறும் புதுப்பிக்க மாத்திரமே.எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள். அதேபோல, pre -paid கார்ட்களுக்கான சர்வீஸ் சார்ஜ் TRAI வரையறை செய்ததை விட இன்னும் கூடுதலாகவேதான் செய்து கொண்டு இருக்கிறார்கள். எதற்க்காக பின் TRAI அதுபோல ஒரு அறிவிப்பு செய்ய வேண்டும் ? எதுவும் மாற்றம் இருந்ததா என்றால் ஒன்றும் இல்லை ? அவரவர் இஷ்டம் போல வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
nazar, dubai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-201301:18:26 IST Report Abuse
nazar, dubai நீ வெளிநாடு போனா அது உன் விதி. நீ ரெண்டு வருஷம் உன் பொண்டாட்டி, புள்ள ,குடும்பத்தை விட்டுட்டு போனாலும் ,வெயில்லெயும் குளிர்லேயும் கிடந்தாலும் ,சம்பளம் கிடைக்காமல் கடனாப்போய் திரும்பி வந்தாலும் ,கண்டுக்காத கவர்மெண்டா உன் சிம் கார்டை பத்தி யோசிக்க போவுது ?
Rate this:
Share this comment
Cancel
Jagannathan B - New York,யூ.எஸ்.ஏ
25-பிப்-201321:12:51 IST Report Abuse
Jagannathan B ஒன்று கவனித்தீர்களா இந்த உத்தரவில் "அனுமதிக்கலாம் " இதில் தான்சிக்கல் மறுபடியும் நிறுவனகளுக்கு அதிகாரம் இத மாற்றி" அனுமதிக்க வேண்டும்" என்று சொல்லவேண்டும் ஆங்கிலத்தில் "may" என்ற வார்த்த்தை நல்லதில்லை உபயோகிப்பாளர்களுக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X