சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி கண்கள் தானம்

Updated : பிப் 25, 2013 | Added : பிப் 25, 2013 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை:"ஆசிட்' வீச்சுக்கு ஆளாகி, 27 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வித்யா, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது விருப்பப்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் வித்யா, 21. பிளஸ் 2 படித்துவிட்டு மேல்படிப்பை தொடர முடியாமல்,
ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி கண்கள் தானம்

சென்னை:"ஆசிட்' வீச்சுக்கு ஆளாகி, 27 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வித்யா, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது விருப்பப்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் வித்யா, 21. பிளஸ் 2 படித்துவிட்டு மேல்படிப்பை தொடர முடியாமல், ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில், பிரவுசிங் சென்டரில் வேலை செய்து வந்தார்.கடந்த ஜன.,30ம் தேதியன்று மதியம், ஒரு வாலிபர், "பிரவுசிங் சென்டர்' உள்ளே நுழைந்து, வித்யாவின் உடலில், ஆசிட் வீசினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் ஓடி வந்தனர்.

தப்பி ஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆதம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்த, விஜயபாஸ்கர், 32, தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் என, தெரிந்தது.

"ஆசிட்' வீசியது ஏன்?


: விஜயபாஸ்கர், வித்யாவை ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். தங்கை திருமணம் முடிந்த பின்புதான், திருமணம் செய்து வைக்க முடியும் என, விஜய பாஸ்கரின் பெற்றோர் கூறிவிட்டனர்."என் தங்கைக்கு பல ஆண்டுகளாக மாப்பிளை பார்க்கிறோம். மாப்பிள்ளை அமையவே இல்லை. இப்போதைக்கு அவளுக்கு திருமணம் நடக்காது. நாம் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம்' என, விஜய பாஸ்கர், வித்யாவை நச்சரித்து வந்தார்.வித்யா, இதற்கு சம்மதிக்கவில்லை. விஜய பாஸ்கருக்கு, குடிப்பழக்கம் உள்ள விஷயமும் வித்யாவுக்கு தெரிந்ததால், அவரை மணப்பது குறித்து வித்யா யோசித்ததாக தெரிகிறது.
இதனால், மனமுடைந்த விஜய பாஸ்கர், தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணி, ஆசிட் வீசினார்.

கண்தானம்: ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த வித்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 27 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இறப்புக்கு ஒரு வாரத்திற்கு முன், தாய் மற்றும் அண்ணனிடம், "நான் ஒருவேளை இறந்து விட்டால், என் கண்களை தானம் செய்து விடுங்கள். என், கண்கள், மற்றவர்களுக்கு பார்வை தரட்டும்' என, கூறியிருந்தார். இதையடுத்து, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.
தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்களை பெற்றனர். அவை, இரண்டு பேருக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க அவரது தாய் சரஸ்வதி, அண்ணன் விஜயும் மறுத்தனர். ஆசிட் வீச்சில் இறந்த இளம்பெண்ணுக்கு, அரசு தரப்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, வித்யாவின் உறவினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

போலீஸ் அதிகாரிகளும், தொடர்ந்து, ஆர்.டி.ஓ., எட்டியப்பனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் தெரிவித்து, உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு, வித்யாவின் உடலை பெற்று சென்றனர்.

வித்யா மீது ஆசிட் வீசிய விஜய பாஸ்கர் மீது, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.வித்யாவின் உடல், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் நேற்று மாலை, வித்யாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி, தாய் சரஸ்வதி, அண்ணன் விஜய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.


"வித்யாவின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் பெற்று தர வேண்டும்' என, உறவினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசிடம் தெரிவித்து, விரைவில் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின், வித்யாவின் உடல், ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


தண்டிக்க வேண்டும்:


வித்யாவின் அண்ணன் விஜய் கூறியதாவது:என் தங்கை, எப்படியும் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வினோதினி மரணமும், அதே வார்டில் மற்றொருவரின் மரணமும், என் தங்கைக்கு மரண பயத்தை ஏற்படுத்தி விட்டது.

மகளை இழந்த தாய் சரஸ்வதி கூறுகையில், ""என் மகள் சாவுக்கு காரணமானவரை, இந்த சமூகம் வேண்டுமானால் மன்னிக்கலாம். என் மகளின் ஆத்மா மன்னிக்காது. போலீசார், கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sham - Ct muththur,இந்தியா
25-பிப்-201323:36:58 IST Report Abuse
Sham பாவப்பட்ட பெண்.. ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... பெற்றோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..
Rate this:
Cancel
vettiboy - COIMBATORE,இந்தியா
25-பிப்-201319:15:29 IST Report Abuse
vettiboy தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் ஒரு பெண், ஆனால் பெண்ணுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை...
Rate this:
Cancel
Pandidurai Kannan - Singapore,இந்தியா
25-பிப்-201318:54:39 IST Report Abuse
Pandidurai Kannan கண்களை தானம் பெற்றவர்கள் ஏதாவது பணம் கொடுப்பது நியாயம்..அதை விட்டுவிட்டு அரசு நஷ்ட ஈடு,வேலை தர வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடாத ஒன்று..இப்படி இறந்தவர்கள் குடும்பம் எல்லாம் போர்க்கொடி தூக்கினால் இந்தியா கவர்மெண்ட் என்ன சத்தரமா? அந்தப் பொண்ணு ஏதோ நாட்டுக்காக உயிரை விட்ட மாதிரி.........வேற வேலையே இல்லையா இவனுங்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X