மயிலம் : மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல்
கல்லூரியில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த
பட்டி மன்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் குமாரசிவ ராஜேந்திரன் தலைமை
தாங்கினார். கல்லூரி முதல்வர் லட்சாராமன் வரவேற்றார். என்.எஸ். எஸ்., திட்ட
அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறைப் பேராசிரியர் இளங்கோ
தலைமையில் சுதந்திர இந்தியாவில் பாரதியின் கனவுகள் நனவாகிவிட்டதா?
நனவாகவில்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் கல்லூரி
பேராசிரியர்கள் இரு அணிகளில் பங்கேற்று பேசினர். வேலூர் திருவள்ளுவர்
பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜசேகரன் மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மயிலம் ஒன்றிய சேர்மன் மலர்மன்னன்,
ஊராட்சித் தலைவர் ரவி வாழ்த்துரை வழங்கினர்.