கவிஞர்கள் கவிதை ஆய்வரங்கத்தில் புகழாரம்| Dinamalar

கவிஞர்கள் கவிதை ஆய்வரங்கத்தில் புகழாரம்

Added : ஆக 19, 2010 | |
சென்னை : "கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல், மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கின்றனர்' என, கவியோகி பேகன் (பி.பாண்டியன்) கவிதைகள் குறித்த ஆய்வரங்கத்தில், முனைவர் மறைமலை இலக்குவனார் பேசினார்.சென்னை எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில், வாழும் தமிழ்க் கவிஞர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்த 113 வது ஆய்வரங்கம் நேற்று நடந்தது.ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற

சென்னை : "கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல், மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கின்றனர்' என, கவியோகி பேகன் (பி.பாண்டியன்) கவிதைகள் குறித்த ஆய்வரங்கத்தில், முனைவர் மறைமலை இலக்குவனார் பேசினார்.சென்னை எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில், வாழும் தமிழ்க் கவிஞர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்த 113 வது ஆய்வரங்கம் நேற்று நடந்தது.ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற தலைவர் கிருஷ்ணசந்த் சோர்டியா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், செயலர் பெ.பக்தவச்சலம் வரவேற்றார். பேராசிரியர்கள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.பாண்டியனின் கவியோகி பேகன் கவிதைகள் குறித்து, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் துணைத்தலைவர் மறைமலை இலக்குவனார் ஆய்வுரை வழங்கினார்.அதில் அவர் கூறியதாவது:கவிதைகளை கவிஞர்கள் தொடர் முயற்சியாக செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் கவிதை சிந்தனையை முழுமையாகவும், பழக்க வழக்கமாகவும் கவியோகி பேகன் கொண்டுள்ளார். 60 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அவர் தமிழ் கீதாஞ்சலி, காதல்பரிசு உள்ளிட்ட பல கவிதை நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். பேகன் கவிதைகள், குறளைப் போன்று எளிமையாக உள்ளன."தமிழ்த்தாய் பிள்ளைத் தமிழ்' என்ற இவரது நூலில் தமிழை பிள்ளையாகக் கருதி கவிதை படைத்துள்ளார். சிறந்த கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல் மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கிறார்கள். கவிஞர் பேகன் நமக்கும் தமிழுக்கும் கிடைத்த விருது.இவ்வாறு மறைமலை இலக்குவனார் பேசினார்.கவியோகி பேகன் பேசிய தாவது:எனக்கு சிந்தனையை கவிதையாக எழுதுவதும், பாடுவதும் இயல்பாகி விட்டது. கவிஞன் படைக்கும் போது உணர்ச்சியின் உச்சத்திற்கு செல்ல வேண்டும். சமகால சிந்தனையில் சொற்கள் வெளிப்பட வேண்டும்.இவ்வாறு பேகன் பேசினார்.ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் இணை செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X