செஞ்சி : செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான
மூலவர், தாயார் சிலைகளை அக். 2ம் தேதி செஞ் சிக்கு கொண்டு வர இருப்பதாக
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் காஞ்சி கண் ணன்
தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ் சிக்கோட்டை வெங்கட்ரமணர்
கோவிலில் சிலை வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என இந்து முன்னணியினரும்,
இந்து அமைப்புகளும் கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்து
அமைப்பை சேர்ந்த தலைவர்கள் செஞ்சிக்கு வரும் போதெல்லாம் வெங்கட்ரமணர்
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். நேற்று
செஞ்சிக்கு வந்த இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் காஞ்சி
கண்ணன் வெங்கட்ரமணர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான வெங்கட்ரமணர், தாயார்
அம்மன் சாமி சிலைகளின் படங்களை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்திய தொல்லியல் துறை சட்டப்படி இச் சிலைகளை
வெங்கட்ரமணர் கோவிலில் நிறுவ கூடாது என்பதற்கு கட் டுப்படுகிறோம். கடந்த
ஒரு ஆண்டுகளுக்கு முன் வெங்கட்ரமணர், தாயார் சிலைகள் செய் யப்பட்டன. ஆகம
விதிப்படி தானிய வாசம், ஜலவாசம் முடிந்து சிலைகள் பிரதிஷ்டைக்கு தயாராக
உள்ளன. சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கிடைக்கும் வரை இந்த சிலையை
செஞ்சியில் வேறு இடத்தில் வைத்து வழிபாடு செய்ய உள்ளோம். இதற்கு மூன்று
இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதியான இடம் முடிவு செய்யப்படவில்லை.
1714ல் செஞ்சியில் இருந்து வெளியேறிய வெங்கட்ரமணர் மீண்டும் அக். 2ம் தேதி
செஞ் சிக்கு வருகிறார். செஞ்சி மக்களும், ஊர் பெரியவர்களும் வெங்கட்ரமணர்
வருகையை பெரிய விழாவாக நடத்த முடிவு செய்துள்ளனர். அப்போது பல கிராமங்களில்
இருந்து மாட்டு வண்டிகளில் அபிஷேக பொருட்கள், பிரசாதங்களை ஊர்வலமாக கொண்டு
வர உள்ளனர். செஞ்சியில் வீதிகள் வழியாக சாமி சிலைகள் வரும் போது
வீடுகளில் செய்யும் அபிஷேகம், பரிவட்ட மரியாதையை ஏற்றுக் கொண்ட பின் னரே
சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படும். இதன் பின்னர் செஞ்சி தாலுகாவில்
உள்ள 50 ஆயிரம் வீடுகளில் வெங்கட்ரமணர் படங் களை கொடுத்து நித்ய பூஜைகள்
செய்யப்படும். வெங்கட்ரமணர் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், சாமி
படங்களை தரிசிக்கவும் விரைவில் இணையதளம் துவக்கப்படும். இவ்வாறு காஞ்சி
கண்ணன் கூறினார்.