மருதமலைக்கு நீங்க வந்துபாருங்க... - எல்.முருகராஜ்

Updated : மே 08, 2013 | Added : மார் 02, 2013 | கருத்துகள் (3)
Share
Advertisement
உலகிற்கு மரியாதை என்ற பண்பை கற்றுத் தரும் கோவை, தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் கோவைக்கு கிடைத்த பொக்கிஷம் மருதமலையாகும்.இந்த மருதமலையில் வீற்றிருக்கும் மருதாசலமூர்த்தி எனப்படும் முருகன் கோயிலுக்கு நீண்ட காலமாக கட்டப்பட்டுவந்த ஏழு நிலை ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் வருகின்ற 18ம் தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற
மருதமலைக்கு நீங்க வந்துபாருங்க... - எல்.முருகராஜ்

உலகிற்கு மரியாதை என்ற பண்பை கற்றுத் தரும் கோவை, தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் கோவைக்கு கிடைத்த பொக்கிஷம் மருதமலையாகும்.
இந்த மருதமலையில் வீற்றிருக்கும் மருதாசலமூர்த்தி எனப்படும் முருகன் கோயிலுக்கு நீண்ட காலமாக கட்டப்பட்டுவந்த ஏழு நிலை ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் வருகின்ற 18ம் தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மருதமலை புதுக்கோலம் பூண்டுள்ளது.
எப்போது, எப்போது என்று பக்தர்கள் ஏங்கித் தவித்த ராஜகோபுரம் பள,பளவென்று நிறைய சிற்பங்களுடனும், அழகிய மண்டபங்களுடனும் கம்பீரமாக எழுந்துள்ளது.
மருதமலையை ஏழாவது படைவீடாக போற்றுவதால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை ஆகிய ஆறு படைவீடுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்கு மண்டபங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. ஆக ஒரே இடத்தில் ஏழு படைவீட்டு முருகனையும் இனி இங்கு தரிசிக்கலாம் என்பது விசேஷமாகும்.


பழநி முருகனைப் போன்ற தண்டாயும் ஏந்தி, இடுப்பில் கைவைத்து நிற்கும் மூலவர் முருகனை சிருஷ்டித்த பாம்பாட்டி சித்தர் குகை கோயிலும் அருகிலேயே உள்ளது. பாம்பு வடிவ பாறையின் கீழ் பாம்பாட்டி சித்தர் விபூதி கவசமணிந்து நின்று அருள்பாலிக்கிறார்.
மருதமலையின் ஸ்தலவிருட்சமான மருதமரமும், வற்றாத சுனையான மருது சுனையும் இந்த பாம்பாட்டி சித்தர் குகைக் கோயிலருகே இப்போதும் உயிரோட்டத்துடன் இருந்து பக்தர்களை மகிழ்விக்கிறது.


மலைப்பாதையில் கார் போன்ற வாகனம் மூலம் செல்லலாம் என்றாலும் 837 படிக்கட்டுகளை நடந்து கடந்து செல்லும் பக்தர்களே அதிகம், இவர்கள் வழியில் உள்ள இடும்பன் சன்னதியையும், தம்பிக்கு உகந்த விநாயகரையும் தரிசிக்கும் பேறு பெற்றவர்களாவார்கள்.
மலை ஏறியதும் முதலில் தென்படும் பஞ்சவிருட்ச விநாயகர் கொஞ்சம் விசேஷசமானவர், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்னும் விசேஷமாக காட்சி தருகிறார். அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகியவை பின்னி பினைந்து வளர்ந்த ஐந்து மரங்களுக்கு அடியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.


ராஜகோபுரம் கட்டித் தந்த கோவை பக்தர்கள் மேலும் தந்த நன்கொடையால் ஆதி முருகன் சன்னதியும், விமானமும், மண்டபமும் கூட பிரம்மாண்டமான அழகுடன் காட்சிதருகிறது.
சுமார் 600 அடி உயரத்தில் அற்புதமாக அமையப் பெற்றுள்ள மருதமலை ராஜகோபுர கம்பீரத்தையும், மருதாசல மூர்த்தியாகிய முருகனின் அழகையும் இந்த தருணத்தில் காண்பது என்பது விசேஷமானது என்பதால் கோவை வரும்போது மருதமலைக்கு சென்று வாருங்கள், அல்லது மருதமலைக்கு செல்வதற்காகவே கோவைக்கு சென்று வாருங்கள்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyamoorthy - Bangalore,இந்தியா
06-மார்-201314:51:07 IST Report Abuse
Sathyamoorthy முருகய்யா, இறைவா, கோவை மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து அருள் புரிய வேண்டும்,
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
04-மார்-201300:03:24 IST Report Abuse
Rajalakshmi ஆஹா , எவ்வளவு நிறைவாக இருக்கிறது. நான் கோவையில் வசிக்கும்போது மருதமலை முருகனை படியேறி தரிசித்தேன். தனியாக போனதால் மிக மிக திருப்தியாக இருந்தது. சின்னப்பா தேவரின் துணைவன் படத்தின் அதியற்புதமான கண்ணதாசன் பாடல் டி.எம்.எஸ். பி.சுசீலா " மருதமலை மீதிலே குடிகொண்டிருப்பவனே..." ....முருகப்பெருமான் இல்லையென்றால் வாழ்வே சூன்யமன்றோ.
Rate this:
Cancel
Arun - Bangalore,இந்தியா
03-மார்-201313:12:54 IST Report Abuse
Arun முருகா விவசாயமும் கல்வியும் செழிக்க அருள் புரிக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X