வைகை அணையில் வெடிகுண்டு சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணையில் வெடிகுண்டு சோதனை

Added : மார் 06, 2013
Share
ஆண்டிபட்டி : வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில், போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். பிப்ரவரி 21ல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நக்சல்கள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,தேனி மாவட்டம் வைகை அணையில் பாதுகாப்பு கருதி, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சிறப்பு

ஆண்டிபட்டி : வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில், போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். பிப்ரவரி 21ல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நக்சல்கள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,தேனி மாவட்டம் வைகை அணையில் பாதுகாப்பு கருதி, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சிறப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
வைகை அணை மற்றும் பூங்கா பகுதிகள், நுண்புனல் மின் நிலையம் உட்பட பல இடங்களில், மெட்டல் டிடக்டர் உதவியுடன் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா, என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை உட்பட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X