பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வதில் "சிக்கல்'

Added : மார் 06, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement
கம்பம் : புதிதாக வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான சாப்ட்வேர் வராததால், பொதுமக்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அனைத்து 18 வயது நிரம்பியவர்களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில் அடையாள அட்டைகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அடையாள அட்டைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பெயர், தெரு, வார்டுகள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டது போல் இல்லை.பெயர்

கம்பம் : புதிதாக வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான சாப்ட்வேர் வராததால், பொதுமக்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
அனைத்து 18 வயது நிரம்பியவர்களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில் அடையாள அட்டைகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அடையாள அட்டைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பெயர், தெரு, வார்டுகள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டது போல் இல்லை.பெயர் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுக்காக, தேனி மாவட்டம் உத்தமபாளையம் தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
திருத்தம் செய்து எப்போது அடையாள அட்டை கிடைக்கும் என்று கேட்ட போது, அங்குள்ள அலுவலர்கள், ஒரு மாதம் ஆகலாம் என்ற பதிலை தெரிவித்துள்ளனர். திருத்தம் செய்வதற்கான சாப்ட்வேர் சென்னையில் இருந்து வரவில்லை என்றும், வந்தபிறகே, திருத்தம் செய்து வழங்க முடியும் என்று கூறுகின்றனர். இதே நிலைதான் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹக்கீம் - chinnamanur  ( Posted via: Dinamalar Android App )
06-மார்-201311:16:55 IST Report Abuse
ஹக்கீம் முறையாக அனைத்து ஆவணங்களும் கொடுத்தும் புகைபபடத்தையும் பெயரையும் மாற்றிவிட்டு சரியான பதி்லும் சொல்லமறுக்கிறார்கள். பின் எப்படி வாக்களிப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X