"மூன்றாம் உலகப்போர்' நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது

Added : மார் 10, 2013 | |
Advertisement
சென்னை: கவிஞர் வைரமுத்துவின், "மூன்றாம் உலகப்போர்' நாவல், இலக்கியச் சிந்தனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் கூறியதாவது:வைரமுத்துவின் பழைய படைப்புகளை எல்லாம் தாண்டி, "மூன்றாம் உலகப் போர்' நாவல் சாதனை புரிந்துள்ளது. நாவல் வெளியாகி, ஒன்பது மாதங்களில், ஒன்பது பதிப்புகளை கண்டுள்ளது. தமிழ்

சென்னை: கவிஞர் வைரமுத்துவின், "மூன்றாம் உலகப்போர்' நாவல், இலக்கியச் சிந்தனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் கூறியதாவது:வைரமுத்துவின் பழைய படைப்புகளை எல்லாம் தாண்டி, "மூன்றாம் உலகப் போர்' நாவல் சாதனை புரிந்துள்ளது. நாவல் வெளியாகி, ஒன்பது மாதங்களில், ஒன்பது பதிப்புகளை கண்டுள்ளது. தமிழ் இலக்கியத் துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு, இந்நாவல், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.உலக தாராள மயம், புவி வெப்பமடைதல், பருவ நிலை மாற்றங்களால், தமிழக விவசாயத்தில் ஏற்படுள்ள மாற்றங்கள், தமிழக விவசாயிகள் படும்பாடு, அவர்களின் தற்கொலை உள்ளிட்டவற்றை, நாவல் வெளிப்படுத்துகிறது. இச்சூழல் தொடருமானால், எதிர்காலத்தில் விவசாயமும், விவசாயிகளும் சந்திக்க வேண்டிய பிரச்னைகளை, நாவல் தெளிவாகச் சொல்லியுள்ளது.இதனால், மூன்றாம் உலகப்போர் நாவல், இலக்கியச் சிந்தனை விருது - 2013க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.தி.ஜானகிராமன், அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன், சின்னப்ப பாரதி, பாலகுமாரன், வண்ணநிலவன் ஆகியோர், இலக்கியச் சிந்தனை விருதுகளை பெற்றவர்கள். சென்னை, ராஜேஸ்வரி மண்டபத்தில், ஏப்ரல் 12ம் தேதி நடக்கும் விழாவில், "மூன்றாம் உலகப்போர்' நாவலுக்கு, இலக்கியச் சிந்தனை விருது அளிக்கப்படும். விருது, 5,000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை உள்ளடக்கியது.இவ்வாறு, லட்சுமணன் கூறினார்.விருது அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, கவிஞர் வைரமுத்து கூறியதாவது:விருது வழங்கும் நாளன்று, கடன் சுமையால், தற்கொலை செய்துகொண்ட 11 தமிழக விவசாயிகளின் குடும்பங்களுக்கு, தலா 1 லட்சம் வீதம், 11 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாம் உலகப்போர் நாவல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஆங்கில மொழியாக்கம் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், அவ்வை நடராஜன் ஆகியோர், மூன்றாம் உலகப்போர் நாவல், இலக்கியச் சிந்தனை விருதுக்கு,தேர்வானதற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X