சாதித்த பெண்களுக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதித்த பெண்களுக்கு விருது

Added : மார் 10, 2013

வெம்பக்கோட்டை: சாத்தூர் ஸ்ரீ ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியில், மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜேசிஐ சிவகாசி டைனமிக் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி பெண்கள் அமைப்பு சார்பில், பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு 'பெமி பவர்' எனும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் தினகரன் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் சாந்தாலட்சுமி முன்னிலை வகித்தார்.ஜேசிஐ சிவகாசி டைனமிக் தலைவர் பொன்ராஜ் வரவேற்றார்.ஜேசிஐ இந்தியா பவுண்டேசன் தலைவர் வல்லப்பதாஸ் விருதுகள் வழங்கினார். மண்டலத் தலைவர் அருண் கலந்து கொண்டார். சுயம்பு அறக்கட்டளை நிறுவனர் உமா,சமூக சேவகர் சீலு,எழுத்தாளர் நிர்மலா கொற்றவை,எச்.பி.,மனிதவளத்துறை அதிகாரி கலா,மேக் வெல் கன்டெய்னர் நிர்வாக இயக்குனர் வான்மதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரி இணைச் செயலாளர் வெங்கட்ராமன்,ஜேசிஐ மண்டல இயக்குனர் சங்கரநாராயணன்,முன்னாள் தலைவர் ராஜேஸ்,கல்லூரி பெண்கள் அமைப்பு தலைவர் திரிபுரசுந்தரி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தனலட்சுமி கலந்து கொண்டனர். முதல்வர் செங்கையா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஓருங்கிணைப்பாளர்கள் கண்ணன் மற்றும் கண்ணபிரான் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X