சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசை வார்த்தை வலையில் மயங்கிய மாணவிகள்; பாலியல் பலாத்காரம் நடந்ததா ? நெல்லை திடுக்

Updated : மார் 12, 2013 | Added : மார் 12, 2013 | கருத்துகள் (49)
Advertisement
ஆசை வார்த்தையில் மயங்கிய நெல்லை மாணவிகள்

திருநெல்வேலி: மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
50 பவுன் நகைகள் -ஏ.டி.எம்.,கார்டு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி தனம் 15.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவரது தந்தை சென்னையில் பணிபுரிகிறார். தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.,கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாள். இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்தார். பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.

தனம் பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும்


அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் "காணாமல் போனதாக' மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பாலியல் ரீதியாக பழக்கம் ?

இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Venkatesan - Mayiladuthurai,இந்தியா
13-மார்-201312:10:58 IST Report Abuse
Mani Venkatesan my suggestion to all parents all child are born with a clean white mind they observed all activities from the elder people, so the child are follower form the elder people and the TV serial (TV is are only entertainment medium but now all women are addicted this story of serial gens are addicted for drinks (FACE IS INDUCT OF MIND) it is a prove verb but it is a real one our children activities are daily observed we find the changes for their activities NAMALU KASTAPATTOM NAM PILLIKALIKU SOLVOM AVARGALLUKUM ORU EDIKALATHAI KODUPOM NALLA SAMUTHAYAM PADIPOM
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-மார்-201312:07:06 IST Report Abuse
Nallavan Nallavan நூலின் நிறம் ... தரம் இதைப் பொறுத்துதான் அமையும் சேலையின் நிறம் மற்றும் தரம் .... "தாயைப் போல பிள்ளை .... நூலைப்போலச் சேலை" என்று தமிழகத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு ...
Rate this:
Share this comment
Cancel
spicer - salem,இந்தியா
13-மார்-201311:52:11 IST Report Abuse
spicer பெண்கள்கலுகு பள்ளிகள் ,கல்லூரிகளில் தனி வகுப்பு வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X