சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தி வரப்பட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல்

Added : ஆக 20, 2010
Advertisement

தூத்துக்குடி :  சவுதி அரேபியாவிலிருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பு பேரீச்சம் பழம் பெட்டிகளின் நடுவே வைத்து கடத்தி வந்து இறக்குமதி செய்யப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்பு மின்னணு சாதனங்களை, தூத்துக்குடியில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி சுங்கத்துறை கமிஷனர் அஜய் தீக்ஷித் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் சந்திரமோகன் தலைமையில் அதிகாரிகள், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு பெட்டகத்தை(கண்டெய்னர்) ஆய்வு செய்தனர். அதில், ஈரானிலிருந்து தரம் குறைவான பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டதாக ஆவணங்களில் இருந்தது. ஆனால், அதற்கு மாறாக அவற்றில் சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர் தர பேரீச்சம் பழம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதனுள் எல்.யி.டி., "டிவி', எல்.சி.டி., "டிவி மற்றும் விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் பதுக்கியிருந்ததும் தெரியவந்தது. இதே போல மற்றொரு பெட்டகத்தில் உயர் ரக பேரீச்சம் பழ பெட்டிகளின் நடுவே உயர் ரக தேன் மற்றும் பேரீச்சம் பழச்சாறு அடங்கிய பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பெட்டகங்களில் பெட்டிகளில் இருந்த பேரீச்சம் பழத்தின் மொத்த மதிப்பு 15 லட்சம் ரூபாய். மின்னணு சாதனங்களின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X