சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிமென்ட் ஆலையில் விபத்து : அரியலூர் அருகே நால்வர் பலி

Added : ஆக 20, 2010
Advertisement

அரியலூர்: அரியலூர் அருகே தனியார் சிமென்ட் ஆலையில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் நால்வர் பலியாகினர். அரியலூர் அருகே கீழப்பழுவூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிமென்ட் ஆலை உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன், புதிதாக கட்டப்பட்ட ஆலையில், சிமென்ட் அரவை பணி நடந்து வருகிறது. இன்று மாலை , கீழப்பழுவூர் சிமென்ட் ஆலையில் உள்ள 140 மீட்டர் உயரமுள்ள சைலோ எனப்படும் அரவை இயந்திரத்தின் மேல் பகுதியில் சுத்தம் செய்வதற்காக, ஆலையில் பணியாற்றும் கான்ட்ராக்ட் தொழிலாளர் உள்ளிட்ட நால்வர் லிஃப்ட் மூலம் சென்றனர். 200 அடி உயரம் சென்ற போது லிஃப்டின் மோட்டார் இயந்திரம் செயலிழந்தது. இதையடுத்து தாறுமாறான வேகத்துடன் கீழே இறங்கிய லிஃப்டில் இருந்த, அரியலூர் எத்துராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறன்(24), தவுத்தாய்க்குளம் கிராமத்தை சண்முகம் மகன் மோகன்(25), டால்மியாபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் சத்தியராஜ்(25), கீழப்பழுவூரை சேர்ந்த சூசைராஜ் மகன் ஜான்(35) ஆகிய நால்வரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். சம்பவ இடத்தை அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா, ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம், தாசில்தார் கோவிந்தராஜூலு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கிறார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X