விழுப்புரத்தில் வக்கீல்கள் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் வக்கீல்கள் மறியல்

Added : ஆக 20, 2010
Share

விழுப்புரம் : விழுப்புரத்தில் வக்கீல்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை சட்டக் கல்லூரி மாணவர் அசோக்குமாரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, விழுப்புரம் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக - புதுச்சேரி வக்கீல்கள் சங்க மாநில துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கோர்ட் முன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வக்கீல்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X