சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈவ்டீசிங் கொடுமை : மாணவி தற்கொலை

Added : ஆக 20, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே ஈவ்டீசிங்கால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் கார்த்திகா(17). பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றதால் அப்பகுதியில் உள்ள டுடோரியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசுக்கு தெரியபடுத்தாமல் பிணத்தை அடக்கம் செய்தனர். இவர் வைத்திருந்த புத்தகத்தை பெற்றோர் பார்த்த போது அதில், "சிலர் தன்னை ஈவ்டீசிங் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களை ஆவியாக வந்து பழி வாங்குவேன்' என எழுதியிருந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசில், செல்வம் புகார் கொடுத்தார். இதில் பிரபாகரன் என்பவரை கார்த்திகா காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உண்மையறிய நாளை கார்த்திகா பிணம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்சல் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஆக-201000:26:13 IST Report Abuse
அப்சல் இதற்கெல்லாம் மன வலிமை குறைவுதான் காரணம்,கண்டிப்பாக எல்லா கல்லூரிகளிலும் இதை பற்றிய ஒரு பாடம் தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X