புதிய போப்பின் பள்ளி பருவ காதலி: காதல் கடிதத்தையும் வெளியிட்டார்

Added : மார் 16, 2013 | கருத்துகள் (10)
Advertisement
Pope's Puppy Love Girlfriend Says he Always Wanted to be a Priest

ரோம்: "என்னை திருமணம் செய்யாவிட்டால், பாதிரியாராகப் போய் விடுவேன்' என, இளம் வயதில், காதலியை கடிதம் மூலம் மிரட்டியவரே, தற்போது, புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற, ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படும், 265வது போப் ஆண்டவராக இருந்த, பெனடிக்ட், உடல்நிலை மற்றும் வயோதிகத்தின் காரணமாக, கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து, கடந்த, 13ம் தேதி, புதிய போப்பை தேர்வு செய்வதற்கான, உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த, 115 கார்டினல்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவை சேர்ந்த, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ, 76, புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவர், "போப் பிரான்சிஸ் -1' என, அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய, தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. அந்த வரிசையில், அவரின் சிறு வயதில் உருவான, "முதல் காதல்' குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஜார்ஜ் மரியோ, தன் பள்ளிப் பருவத்தில் கொடுத்த காதல் கடிதத்தை, அர்ஜென்டினாவைச் சேர்ந்த அமாலியா டெமான்டே, 76, என்ற மூதாட்டி இப்போது வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் மரியோவும், அமாலியாவும், பள்ளிப் பருவத்தில் ஒன்றாக படித்த போது, தன், 12வயது வயதில், அமாலியாவிடம், காதல் கடிதம் கொடுத்துள்ளார் ஜார்ஜ் மரியோ.
இதுதொடர்பாக அமாலியா கூறியுள்ளதாவது: புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜார்ஜ் மரியோவும், நானும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்தோம். எங்களுக்கு, 12 வயது இருக்கும் போது, திடீரென ஜார்ஜ் மரியோ என்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். அதில், "உன்னை மணக்க ஆசைப்படுகிறேன். நீ சரி என்றால் மணப்பேன். இல்லையெனில், பாதிரியாராகி, மத சேவையில் ஈடுபடுவேன்' என, தெரிவித்திருந்தார். அந்த கடிதத்தில், வெள்ளை மாளிகை படத்தையும், அதன் மேற்கூரையை, சிகப்பு நிறத்திலும் வரைந்திருந்தார். ஜார்ஜ் மரியோ கடிதத்திற்கு, பதில் கடிதம் எழுத நினைத்தேன். ஆனால், அந்த கடிதம் பற்றி என் பெற்றோருக்கு தெரிந்து விட்டதால், அடித்தனர். பின், வேறு இடத்திற்கு என்னை கூட்டிச் சென்று விட்டதால், அதன்பின், ஜார்ஜ் மரியோவை சந்திக்க முடியவில்லை. அவர் இப்போது, போப்பாகியுள்ள மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venks - mumbai,இந்தியா
20-மார்-201311:01:50 IST Report Abuse
venks மணிரத்தினத்தின் அடுத்த படத்திற்கு கரு ரெடி
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
17-மார்-201306:15:53 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan இதை ஒரு செய்தி என வெளியிடுவதற்கு அப்படி என்ன தப்பு செய்து விட்டார்?
Rate this:
Share this comment
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
17-மார்-201306:09:59 IST Report Abuse
Siva Panchalingam அந்த பாட்டி சொல்லுற விடயம் ஒரு கிரிமினல் குற்றம் என்ற கருத்தில் சொல்ல முடியுமா? எல்லாருடைய இளமை காலத்திலும் இப்படியான சம்பவங்கள் வரும்.போகும் .ஒரு நாட்டுக்கு உதவாத சமுக விரோத செயல் செய்தால் அல்லது செய்திருந்தால் மட்டுமே அது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு குற்றம் ஆகும். தமக்கு நன்கு தெரிந்த ஒரு மனிதன் இன்று பாப்பரசர் ஆகி இருப்பது இந்த வஜதான பாட்டிக்கு தாங்கி கொள்ள கொஞ்ச சிரமமாய் இருக்கு போல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X