மன்னார்குடி, கொடுமுடி புராதான நகரங்களாக அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மன்னார்குடி, கொடுமுடி புராதான நகரங்களாக அறிவிப்பு

Added : மார் 17, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மன்னார்குடி, கொடுமுடி உள்ளிட்ட, 15 நகரங்களை, புராதான நகரங்களாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பண்டைய கலாசாரம், பண்பாடு, கட்டக் கலைகளை பாதுகாக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திட்டமிடாத நகரப்புற பரவலின் காரணமாக, புராதான நகரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, 39 நகரங்கள், புராதான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து, மேலும், 15 நகரங்கள் புராதான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புராதான நகரங்களில், மன்னார்குடி, நாமக்கல், மயிலாடுதுறை, தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகர், பெருங்குளம், திருக்கோயிலூர், ஸ்ரீமுஷ்ணம், தாரமங்கலம், திருப்பரங்குன்றம், சோளிங்கர், சென்னிமலை, திருவட்டாறு, சுசீந்தரம், கொடுமுடி ஆகியவை அடங்கும். "இவற்றின் வளர்ச்சித் திட்டங்களுக்காக, நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து, 1 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்படுகிறது' என, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X