அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க., : வாக்காளர்களை கவர புது யுக்தி

Added : மார் 17, 2013 | கருத்துகள் (19)
Share
Advertisement
லோக்சபா தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள, அ.தி.மு.க., கிராமப்புற மக்கள் மற்றும் ஏழைகள் ஓட்டுகளை குறிவைத்து களம் இறங்கியுள்ளது; இதற்காக, கிராமப்புற மக்களை, தங்கள் பக்கம் ஈர்க்க, புதிய யுக்தியை கையாளுகிறது.வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., - தி.மு.க.,- தே.மு.தி.க., உள்ளிட்ட, கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான,
 லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க., :  வாக்காளர்களை கவர புது யுக்தி

லோக்சபா தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள, அ.தி.மு.க., கிராமப்புற மக்கள் மற்றும் ஏழைகள் ஓட்டுகளை குறிவைத்து களம் இறங்கியுள்ளது; இதற்காக, கிராமப்புற மக்களை, தங்கள் பக்கம் ஈர்க்க, புதிய யுக்தியை கையாளுகிறது.
வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., - தி.மு.க.,- தே.மு.தி.க., உள்ளிட்ட, கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., இப்போதே, அதற்கான பிரசாரத்தை துவங்கியுள்ளது.
கிராம மக்களை, ஒரே இடத்தில் கூட்டுவது கடினம். மேலும், அவர்களிடம் கட்சி சாதனைகளை எடுத்து சொன்னால், பொறுமையாக கேட்க மாட்டார்கள். இதனால், கிராமப்புற மக்களுக்கு, அ.தி.மு.க., அரசின் சாதனைகளை உணர்த்தி, லோக்சபா தேர்தலில் தங்கள் பக்கம் ஈர்க்க, கட்சி நிர்வாகிகள், புதிய யுக்தியை கையாளுகின்றனர்.வழக்கமாக, முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை, கட்சியினர் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடுவர். பஞ்சாயத்துகளில், ஏழை, எளிய மக்களுக்கு ஆங்காங்கே வேட்டி, சேலை வழங்குவர். ஆனால், நடப்பாண்டு, லோக்சபா தேர்தலை குறி வைத்து, நகர, ஒன்றிய அளவில், பொதுமக்கள், 2,000 முதல், 3,000 ம் பேருக்கு வேட்டி, சேலை, போர்வை என, இலவசமாக வழங்குகின்றனர்.வேட்டி, சேலை, போர்வையை, ஒரே இடத்தில் வழங்குவதாக கூறி, அவர்கள் அனைவரையும், ஏதாவது ஒரு இடத்தில் நடக்கும் விழாவுக்கு, மொத்தமாக வரவழைக்கின்றனர். விழாவில், முதலில், இலவசங்களை வழங்கினால், பொதுமக்கள் கலைந்து சென்று விடுவர் என்பதால், விழாவை துவக்கி வைத்து, அதில், அ.தி.மு.க., அரசு சாதனைகளை பேச்சாளர்களும், இசைக்குழுவினர் பாடல்கள் மூலமும் தெரியப்படுத்துகின்றனர்.
இறுதியாக, "தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு உங்கள் ஓட்டு' என, பிரசாரம் செய்த பின், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, போர்வை போன்ற இலவசங்கள் வழங்கப்படுகின்றன.வாக்காளர்களை, ஒரே இடத்துக்கு வரவழைத்து, அ.தி.மு.க., மேற்கொள்ளும் பிரசாரம், மற்ற கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanal - Chennai,இந்தியா
18-மார்-201305:16:30 IST Report Abuse
Kanal எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே இருள் சூழ்ந்த தமிழகத்திற்கு முதலில் வெளிச்சம் கொடுங்க கூரை ஏறி கோழி பிடிக்க முடியலை....வானம் ஏறி வைகுண்டம் போக ஆசை.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
18-மார்-201305:15:30 IST Report Abuse
Pannadai Pandian 1960 களில் திமுக இப்படித்தான் காங்கிரசுக்கு எதிராக ஊர் ஊராக சென்று பொது கூட்டம் போட்டு மக்களிடம் கொள்கைகளை பரப்புவார்கள். முதலில் உள்ளூரில் இருக்கும் சிறு குறு தலைகள் எல்லாம் வாயில் வந்ததை எல்லாம் காலித்தனமாக, வக்கரமாக பேசி ஆரம்பிப்பார்கள். கூட்டம் கலையாமல் இருக்க கொல்லாங்குடி கருப்பாயி இசைக்கச்சேரி, நாகூர் ஹனீபா கத்தல், காகிதப்பூ நாடகம் என்று இழுத்துக்கொண்டே செல்வார்கள். பெருந்தலைகள் எங்கேயோ ஒரு இடத்தில் படுத்து தூங்கி கொண்டு இருக்கும். கடைசியாக ஒரு 11 மணியளவில் வெளிவருவார்கள். பின் மைக்கை பிடித்து காங்கிரசை ஒரு பிடி பிடிப்பார்கள். காங்கிரசின் மணிப்ரவால நடை பேச்சுக்கு (தமிழும் வடமொழியும் கலந்த) இவர்களின் சுத்தமான அழகிய (அசிங்கமான வார்த்தைகள் கொண்ட) அடுக்குமொழி பேச்சு போதையை ஏற்றும். போதை ஏறினாள் மூளை வேலை செய்யுமா ?? செய்யாது. அதனால் ஆட்சிமாற்றம் வந்தது. சீமை சீமான்களும் மாடி வீட்டு மைனர்களும் மண்ணை கவ்வி சுப்பனும் குப்பனும் அதிகாரத்தை அனுபவிக்க தொடங்கினர். ஆனால் அது மிக சொற்ப காலத்துக்கே நீடித்தது. கருணாநிதி கட்சியை பிடித்ததும் தறுதலைகள் ஆள ஆரம்பித்துவிட்டனர். இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் பொதுகூட்டம் நடத்தும் போது அங்கு கலாட்டா செய்வதும், அடித்து துவைப்பதும் கூட்டத்துக்குள் பாம்பு விடுவதும் ரொம்ப விறுவிறுப்பாக இருக்கும். 1970 களில் எம்ஜிஆர் ஆட்சி அமைத்த பின்பே இவருங்க கோட்டம் கொஞ்சம் அடங்கியது. இவனுங்க செஞ்ச அராஜகம் கொஞ்சமா நஞ்சமா ??? 1960 களில் பிறந்தவர்களுக்கே இவர்களை பற்றி தெரியும்.
Rate this:
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
18-மார்-201304:48:07 IST Report Abuse
aymaa midas=vison2023 முன்னாள் இம்சையார் இப்படி தான் கட்டிபிடி வைத்தியம் நூறு ரூபாய் நோட்டு அப்புறம் கிழவிகளை கண்டால் பொங்கி எழுந்துவிடுவார் இப்படி உட்டாலக்கடி பண்ணி தான் பொழப்பை ஓட்டினார் மீண்டும் அதே பாணியா....... விளங்கிடுவிங்க, நாடும் விளங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X