நில அபகரிப்பு வழக்குக்கான சிறப்பு கோர்ட் மாயம்: பணிகள் முடக்கம்| No Special Court for the trial of land grab case | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்குக்கான சிறப்பு கோர்ட் மாயம்: பணிகள் முடக்கம்

Updated : மார் 18, 2013 | Added : மார் 17, 2013 | கருத்துகள் (11)
Share
கோவை: நில அபகரிப்பு வழக்குகளை தனிக் கோர்ட்டில் விசாரிக்கக் கூடாது என, தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், இவ்வழக்குகளை விசாரிப்பதற்காக கோவையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட் மாயமாகி விட்டது; இக்கட்டடத்தில், தற்போது மகளிர் கோர்ட் (மாஜிஸ்திரேட் நிலை) செயல்பட்டு வருகிறது.சில ஆண்டுகளுக்கு
நில அபகரிப்பு வழக்குக்கான சிறப்பு கோர்ட் மாயம்: பணிகள் முடக்கம்

கோவை: நில அபகரிப்பு வழக்குகளை தனிக் கோர்ட்டில் விசாரிக்கக் கூடாது என, தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், இவ்வழக்குகளை விசாரிப்பதற்காக கோவையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட் மாயமாகி விட்டது; இக்கட்டடத்தில், தற்போது மகளிர் கோர்ட் (மாஜிஸ்திரேட் நிலை) செயல்பட்டு வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நில விற்பனை அமோகமாக நடந்தது. தனியாருக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் விற்கப்பட்டன. சில அரசியல்வாதிகளும், நில ஆக்கிரமிப்பாளர்களும் கைகோர்த்துக் கொண்டு,சொந்தம் கொண்டாட ஆள் இல்லாத இடம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களை சொந்தமாக்கி விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அடாவடி விலை கொடுத்து வாங்கப்பட்ட விவசாய நிலங்கள், மீண்டும் நிலத்தின் உரிமையாளர்களுக்கே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் சிறப்பு போலீஸ் படை மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்கள் துவக்கப்பட்டன. கோவை மண்டலத்தில் பல நூறு ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது. அபகரிப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க, கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்கள் திறக்கப்பட்டன.அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட இருந்த நிலையில், நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு பெறப்பட்டன. இந்
நிலையில், இதில் பாதிக்கப்பட்ட சிலர், "வழக்குகளை தனிக்கோர்ட்டில் விசாரிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் செயல்படும் வழக்கமான கோர்ட்களில்தான் விசாரிக்கப்பட வேண்டும்,' எனக் கோரி, ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர்.நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க முடியாதபடி தடை உத்தரவு பெறப்பட்டதால், கடந்த எட்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் இச்சிறப்பு கோர்ட்களின் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.இதனால், இந்த கோர்ட்களில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள், சிறப்பு நீதிபதிகள் வேறு கோர்ட்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது, இக்கோர்ட் பணியில் ஊழியர் ஒருவர் மட்டுமே உள்ளார்.கோவையில், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட் செயல்பட்ட கட்டடம் பறிபோன நிலையில், அந்த இடத்தில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மகளிர் கோர்ட் (மாஜிஸ்திரேட் நிலை)திறக்கப்பட்டு,செயல்பட்டு வருகிறது.இக்கோர்ட்டின் சிறிய அறை ஒன்றில் தனது பணியை செய்து வந்த தலைமை எழுத்தரும், பழைய கட்டடமான மகளிர் கோர்ட் கட்டடத்தின் கீழ் பகுதியில் உள்ள அறைக்கு (கோர்ட்டையும் சேர்த்து) மாற்றப்பட்டுள்ளார்.இந்த அறையில் நில அபகரிப்பு வழக்குகளுக்கு சம்பந்தமில்லாத,வேறு சில கோர்ட்களின் அலுவலக ஊழியர்களும் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X