இணக்கத்துடன் செக்ஸ் வயது இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

Added : மார் 18, 2013
Advertisement

புதுடில்லி: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது:இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும்.இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.
பிரதமருக்கு கடிதம்
இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது. இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X