பொது செய்தி

இந்தியா

விஸ்வரூபத்திற்கு 2 தேசிய விருது கிடைத்தது; சிறந்த பாடகராக சங்கர்மகாதேவனுக்கு விருது

Updated : மார் 18, 2013 | Added : மார் 18, 2013 | கருத்துகள் (11)
Advertisement
விஸ்வரூபத்திற்கு 2 தேசிய விருது கிடைத்தது; சிறந்த பாடகராக சங்கர்மகாதேவனுக்கு விருது

புதுடில்லி: 2012 ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் சங்கர்மகாதேவனுக்கும் விஸ்வரூப படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்துள்ளன. இன்று அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் விவரம் வருமாறு: தமிழ் திரைப்படமாக பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 / 9 என்ற திரைப்படம் சிறந்த பிராந்திய படமாகவும், சிறந்தஒப்பனைக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஸ்ரீயும், கதாநாயகியாக ஊர்மிளாமகந்தாவும் நடித்துள்ளனர். கஹானி என்ற இந்தி திரைப்படம் சிறந்த திரைக்கதைக்காக விருது பெறுகிறது. இந்தி திரைப்படம் பான்சிங் தோமர் என்ற படத்தில் நடித்த இர்பான் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஸ்வரூபம் 2 விருதை தட்டி சென்றுள்ளது. சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்பிற்கு விஸ்வரூபம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விக்கி டோனர் என்ற இந்தி திரைப்படம் சிறந்த பொழுது போக்கு படமாகவும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி என்ற திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதைபெற்றுள்ளது.

சிட்டாகாங் என்ற படத்தில் பாடியமைக்காக சங்கர்மகாதேவனும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி மொழி படத்தில் நடித்த உஷாஜாதவ் சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrapandi - ramanathapuram,இந்தியா
19-மார்-201307:47:48 IST Report Abuse
chandrapandi சினிமா துறையில் விஸ்வருபத்துக்கு கிடைத்த வெற்றி...........
Rate this:
Share this comment
Cancel
siva - bangalore,இந்தியா
19-மார்-201306:49:12 IST Report Abuse
siva ம்ம்ம்ம்.................கமலுக்கு எதுவுமில்லையா ?...அதுவும் நடனம் அமைத்து கொடுத்த பண்டிட் பிர்ஜு மகாராஜுக்கு விருது கிடைத்துள்ளது ...ஆடிய கமலுக்கு எதுவுமில்லை .....திரைக்கதை,இயக்கம்,நடிப்பு என்று ஒன்றில் கூட தேறவில்லையா விஸ்வரூபம் ...சும்மா தலையில் தூக்கி வெச்சு ஆடுனதுதான் மிச்சம் ....அட போங்கப்பா
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393