பொது செய்தி

தமிழ்நாடு

ஐ... எங்க வீட்லயும் "லைட்' வந்துருச்சு..: சோலார் கிராமமான "சிற்றருவிப்பட்டி'

Added : மார் 20, 2013 | கருத்துகள் (7)
Advertisement
Siraruvipatti gets its first solar lamps

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் வெள்ளிமலைப்பட்டி ரோடு வரை பஸ் செல்லும். பிறகு மூன்று கி.மீ., தூரம் குண்டும் குழியுமான சாலையை கடக்க வேண்டும். விவசாயத்தைத் தவிர வேறு எதையும் அறியாத மக்கள். நெல், கரும்பு, வாழை, துவரை விளைகிறது. ஊருக்குள் சென்றால் ஆங்காங்கு சிறு குடிசைகள்...இதுதான் சிற்றருவிப்பட்டி.

21ம் நூற்றாண்டிலும் இரவில் நிலவொளியை மட்டும் நம்பி வாழ்கின்றனர். அமாவாசை இரவில் அதுவும் இருக்காது. நபார்டு வங்கியின் நீர்வடித் திட்டத்தின் கீழ், மலையில் இருந்து வீணாகும் தண்ணீரை ஆங்காங்கு தேக்கி வைக்க, தேர்வான இக்கிராமம், தற்போது சோலார் கிராமமாகியுள்ளது. மொத்தம் 25 குடும்பங்கள், 16 வீடுகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சோலாரின் பயனை விளக்க நான்கு மாதங்கள் ஆகின. வங்கி உதவிப் பொதுமேலாளர் சங்கர் நாராயணனின் முயற்சியால், இங்குள்ள எட்டு வீடுகளில் இரவில் வீட்டுக்குள் வெளிச்சத்தை பார்க்கின்றனர். நபார்டு வங்கி மூலம் மத்திய அரசின் நேரு "சோலார் மிஷன்' மானியம் 40 சதவீதம் தரப்படுகிறது.

வெளிச்சத்தைக் கண்டு வியக்கும் மக்களின் வெள்ளந்தியான வார்த்தைகள் இதோ...

அய்யாவு: ஒரு வீட்டுக்கு "சோலார் லைட்' அமைக்க 28 ஆயிரம், வங்கிக் கணக்கு துவங்க, மற்ற செலவு சேர்த்து 30ஆயிரம் ரூபாய். எங்களிடம் 10 சதவீத பங்களிப்பு கேட்டாங்க. 40 சதவீதம் நபார்டு மானியம். மீதி 50 சதவீதத் தொகையை, அ.வல்லாளப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனா தந்துச்சு. தினமும் விளக்குக்கு பத்து ரூபா செலவு பண்ணோம். அந்தக் காசை சேர்த்து வச்சு, மாதம் 350 ரூபாய் கடன் அடைக்கிறோம்.

மீனாட்சி: என் மகனுக்கு 15 வயசாச்சு. நடக்க மாட்டான். அவன வச்சுகிட்டு ராத்திரி ரொம்ப கஷ்டப்பட்டேன். இருட்டுல என்ன இருக்குனே தெரியாது. வெளியில் நாலு கட்டைய வச்சு எரிச்சு, சோறாக்குவோம். அந்த வெளிச்சத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துருப்போம். விளக்குக்கு மண்ணெண்ணெய் ஊத்தி கட்டுப்படியாகாது. இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிடுறோம். சோலார் கருவி மூலமா, வீட்ல ரெண்டு "லைட்', வாசல்ல ஒரு "லைட்', ஒரு "பேன்' சுத்துது. ரொம்ப மழை, புயலடிச்சா... வெயில் குறைஞ்சுரும். அந்தநேரம் ஒரு "லைட்' மட்டும் போட்டுக்குவோம்.

ராஜலட்சுமி (எட்டாம் வகுப்பு): மேலூர் ஸ்கூல்ல தங்கி படிக்கிறேன். லீவு நாள்ல வீட்டுக்கு வந்தா... "லைட்டே' இருக்காது. "சோலார் லைட்' போட்டதுக்குப்புறம் என் நண்பர்களிடம், "ஐ... எங்க வீட்லயும் "லைட்' வந்துருச்சு'னு பெருமையா சொன்னேன். "ஷெல்கோ' சோலார் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. மீத எட்டு வீடுகளுக்கும் விரைவில் "சோலார்' மூலம் வெளிச்சம் கிடைக்க போகிறது. மதுரையில் "சோலார் கிராமம்' என்ற பெருமை, சிற்றருவிப்பட்டிக்கு கிடைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
23-மார்-201311:00:43 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar அரசின் கான்கிரீட் வீடுகள் திட்டம் இன்னமும் அங்கு அமலாகவில்லையா? இது போன்ற அறிய செய்திகளை தினமலர் வெளியிடவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
22-மார்-201313:12:21 IST Report Abuse
Sathyamoorthy சோலார் ஒரு சிறந்த மாற்று வழி, மின்சார உற்பத்திக்கு...
Rate this:
Share this comment
Cancel
Sathya Garan - puducherry,இந்தியா
20-மார்-201312:09:01 IST Report Abuse
Sathya Garan சோலார் மட்டுமா நம்மக்கு நிலையான கரண்ட் கொடுக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X