அரவிந்தர் ஆசிரமம் மீது கல்வீசி தாக்குதல்

Updated : மார் 21, 2013 | Added : மார் 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement
அரவிந்தர் ஆசிரமம் மீது கல்வீசி தாக்குதல்

புதுச்சேரி: இலங்கை விவகாரம் தொடர்பாக, புதுச்சேரியில் இன்று நடந்த, கடையடைப்புப் போராட்டத்தின் போது, அரவிந்தர் ஆசிரமம் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் ஈடுபட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள், புதுச்சேரி மரைன் வீதியிலுள்ள, அரவிந்தர் ஆசிரமத்திற்குள், இன்று காலை திடீரென நுழைந்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாநில தலைவர் வீரமோகன் தலைமையில், ஆசிரமத்தின் நுழைவாயிலில் வைத்திருந்த பூந்தொட்டிகளை உடைத்து, சேதப்படுத்தி ஓடினர். சம்பவம் தொடர்பாக, பெரியகடை போலீசார், அரவிந்தர் ஆசிரமத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raju.sp - chennai,இந்தியா
21-மார்-201320:55:54 IST Report Abuse
raju.sp வீரமணி விட்டில் நிறைய பணம் இருக்குது. அவர் வீட்டை உடைத்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X