கொழும்பு : இந்தியா- இலங்கை உறவு ஒருபோதும் குறையாது என்றும் , இந்தியா நம்மை விட்டு விலகிப்போகாது என்றும் இது தொடர்பான சூழ்ச்சிக்கு நாம் அச்சப்படத்தேவையில்லை என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள் என்றார். இந்த பழமொழியில் சஸ்பென்சை வைத்தார். இது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை.
இவரது லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:
‘ இந்தியா-இலங்கை உறவு குறையாது’-
எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா, இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.இது தொடர்பாக நாம் ஒருபோதும் அச்சமடைய தேவையில்லை. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஒருபோதும் குறையப் போவதில்லை. இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க என்னை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
நமது கட்சி பயங்கரவாதத்தை இல்லாமல் அழித்துள்ளது. ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’. பிளவடைந்திருந்த நாட்டை ஒரே தேசமாக மாற்றியுள்ளோம். பொய்களுக்கு வதந்திகளுக்கு பெருமளவு சக்தி காணப்படுகின்றது.எனினும் இதனை வெற்றி கொள்ள கட்சி என்ற ரீதியில் எங்களால் முடியும். கட்சியை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE