சவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இந்தியர்களை வெளியேற்ற திட்டமா?

Added : மார் 29, 2013 | கருத்துகள் (1)
Advertisement

திருவனந்தபுரம்: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், "இதுகுறித்து கவலைப்படவேண்டாம்' என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார்.

"நிதாகத்'


உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, "நிதாகத்' என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


5 லட்சம் பேர்


இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும். இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது.இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள இந்த புதிய பிரச்னை குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார்.அதில், சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், ""சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,'' என்றார்.




Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-மார்-201306:50:34 IST Report Abuse
ஆரூர் ரங அரபு நாடுகளுக்குப் போகும் யாரும் அங்கு வேலை நிரந்தரம் என நினைத்துப் போவதில்லை. எந்நேரமும் தலை மேல் கத்திதான் அந்த ஊர் இளைஞர்கள் வேலை கேட்டுப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உழைக்கும் மனோபாவமே இல்லையே .இங்கும் பல பகுதி தொழில்நுட்ப(Semi sed)வேலைகளுக்கு ஆளில்லாமல்தான் திண்டாடுகின்றோம். திரும்பிவருவதால் நன்மையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X