பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை

Updated : மார் 30, 2013 | Added : மார் 30, 2013 | கருத்துகள் (49)
Advertisement
Sterlite Industries closed over on Protests

தூத்துக்குடி: பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இன்று மூட உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இங்கு வழங்கி வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சமீபத்தில் கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியேறிய புகாரை அடுத்து நடந்த போராட்டங்களின் எதிரொலியாக சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி - மதுரை ரோட்டில் ( சிப்காட் பகுதி ) அதாவது தூத்துக்குடி நகர் பகுதியில் இருந்து சுமார் 14 கி.மீட்டர் தொலைவில் இந்த ஆலை உள்ளது. இங்கு தாமிரம் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட ரசாயனத்தை கலந்து பிளாட்டினம், தங்கம் என பல்வேறு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலைக்கு கடந்த 1993 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. வட மாநிலத்தை சேர்ந்த அனில்அகர்வால் என்பவர் இதற்கு சேர்மன் ஆவார். இந்த ஆலை பல ஆயிரம் கோடி செலவில் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரிடையாக உள்ளூர் மக்களுக்கு 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.மக்களுக்கு இருமல், மூச்சு திணறல் :

இந்த ஆலை துவங்கும் முன்னரே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலக்ககட்ட போராட்டங்களை சந்தித்து வந்தது. ஆலைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ல் மூடும் உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்தது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் சென்று தடை பெற்று மீண்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 23 ம் கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியேறியது. இதனால் சுற்றுப்பகுதி மக்கள் இருமல், மூச்சு திணறல், தலைசுற்றல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் ஸ்டெர்லைட்ஆலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு நடந்தது. இதில் வைகோ உள்ளிட்ட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.மின் இணைப்பு துண்டிப்பு :

இந்த ஆலை நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. நச்சு வாயு வெளியானதை தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133ன்கீழ் ஏன், தொழிற் சாலையில் உள்ள கந்தக அமில ஆலையை மூடக் கூடாது என்று விளக்கம் கேட்டு கலெக்டர் ஆஷீஸ்குமார் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலையை மூட உத்தரவை நேற்று நள்ளிரவில் பிறப்பித்தது. இன்று காலை ஆர்.டி.ஓ., லதா. தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று அரசின் ஆணையை வழங்கி ஆலையை மூடும் நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்டமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த ஆலை மூடப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தூத்துக்குடி வணிகர்கள் பலரும் பட்டாசு வெடித்தனர்.


சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவை: இந்த ஆலையை திறப்பதா, மூடுவதா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநில அரசு மூடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.


வைகோ வரவேற்பு: ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். நாசகார உருக்காலையை மூட 17 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தோம். ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்க்கத்தக்கது என கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manasatchi - Chennai,இந்தியா
31-மார்-201308:45:34 IST Report Abuse
Manasatchi ஆனாலும் வாயு கசிவு ஏற்படும் வரை அஜாக்கிரதையாக இருந்தது தண்டிக்க பட வேண்டிய ஒன்று...
Rate this:
Share this comment
Cancel
Manasatchi - Chennai,இந்தியா
31-மார்-201308:43:32 IST Report Abuse
Manasatchi பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன் உடனடியாக இழுத்து மூடியது வரவேற்க தக்கது... 15 -17 வருடமாக இயங்கிய தொழிற்சாலை... பாதுகாப்பு மேம்பாடுகள் செய்து மாசு கட்டுபாட்டு வாரிய தர சான்றுதல் பெற்று மீண்டும் இயங்கும் எனலாம்...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
31-மார்-201306:39:36 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் மாசுக்கும் பஞ்சம் இல்லை ,லஞ்சம் மற்றும் ஊழலால் காசுக்கும் பஞ்சம் இல்லை இதே போல நீர் மற்றும் நில மாசு ,காற்று மாசு போன்றவற்றை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது ஒழுங்கு நடவடிக்கை அவசியம் .புற்றீசல் போல் ,காளான்கள் போல் தனியார் பொறியியல் கல்லூரிகள் .பெருகி பட்டதாரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வரும் இவ்வேளையில் தொழிற்சாலைகள் அமைப்பதில் ,நடத்துவதில் ,துவங்குவதில் போதிய மாசுக்கட்டுப்பாடு அனைத்து தொழில்களிலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது .வருங்காலம் வளமாக இருக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.. ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X