கோவையில் கன்னியாஸ்திரி சாவில் மர்மம்? பிரேதத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் கன்னியாஸ்திரி சாவில் மர்மம்? பிரேதத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Added : மார் 31, 2013

கோவை:இளம் கன்னியாஸ்திரி சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, பீளமேடு, சவுரிபாளையம், மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரீட்டாமேரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். ஏஞ்சலின்நிர்மலா ரீனா, 26, என்ற மகளும், சார்லஸ் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த ஒன்பது ஆண்டு
களுக்கு முன், டவுன்ஹால்,
பிரசன்டேஷன் கான்வென்ட் கிறிஸ்தவ சபையில், ஏஞ்சலின் கன்னியாஸ்திரியாக சேர்ந்தார். பயிற்சிக்காக மதுரை, கிணத்துக்கடவு பகுதிகளில் செயல்படும் கிறிஸ்தவ சபைகளுக்கு சென்றார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன், கோவை, லாலிரோடு, ஜான் பிரிட்டோ சர்ச்சுக்கு
சொந்தமான, புனித கன்னிகை அன்னை கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கியிருந்து, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ., படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை, கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், ஏஞ்சலின் மயங்கி கிடந்தார். கன்னியாஸ்திரிகள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவ
மனையில் சேர்த்தனர். ஏஞ்சலின் உடல்நிலை மோசமாகவே, அங்கிருந்து போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்; சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ
மனைக்கு,கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து ஆர்.எஸ்., புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
கோவை அரசு மருத்துவ
மனையில், ஏஞ்சலின் சடலம் நேற்று காலை பிரேத பரி
சோதனை செய்யப்பட்டு, அவர் கன்னியாஸ்திரியாக பணியாற்றிய கிறிஸ்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாஸ்திரி சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனையில், ஏஞ்சலின் சடலம் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர்.
இறுதியில், ஏஞ்சலின் சடலத்தை கிறிஸ்தவசபை நிர்வாகிகள் பெற்று சென்றனர்.
இதுகுறித்து ஏஞ்சலின் சகோதரர் சார்லஸ் கூறியதாவது:
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டுக்கு வந்த ஏஞ்சலின், தான் தங்கியிருக்கும் இல்லத்தில், பிற கன்னியாஸ்திரிகள், தன்னுடன் சரியாக பழகுவதில்லை, "டார்ச்சர்' செய்கின்றனர் என்றார். அவருக்கு நாங்கள் அறிவுரை கூறி அனுப்பினோம். இந்நிலையில், நேற்று முன்
தினம் மதியம் எனது சகோதரி தங்கியிருந்த இல்லத்திலிருந்து போன் செய்த கன்னியாஸ்திரிகள், "உங்களது சகோதரி உடல்நல குறைபாடு காரணமாக, போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், உடனடியாக வாருங்கள்' என்று கூறினர்.
தாய் மற்றும் உறவினர்களுடன் போத்தனூர் மருத்துவ
மனைக்கு சென்றோம். என் சகோதரி நெஞ்சுவலியால்
இறந்துவிட்டதாக கிறிஸ்தவசபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று
(நேற்று) என்னுடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது, குடும்ப பிரச்னை காரணமாக, எனது சகோதரி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நிர்வாகிகளின் செயல்பாடு சந்தேகிக்கும் வகையில் உள்ளது.
நேற்று முன்தினம் காலை ஏஞ்சலின் மயங்கி கிடந்துள்ளார். முதலுதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சகோதரியை பரிசோதித்த டாக்டர்கள், "ஆபத்தான நிலையில் இருப்பதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு' அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போத்தனூரிலுள்ள சர்ச்சுக்கு தொடர்புடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால், சகோதரியின் சாவில் மர்மம் இருப்பதாக கருதுகிறோம்; போலீசில் புகார் செய்துள்ளோம்.
இவ்வாறு, சார்லஸ் கூறினார்.



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X