கிரிக்கெட் தகராறில் இருதரப்பு மோதல் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் காயம் :போலீசார் துப்பாக்கி சூடு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் தகராறில் இருதரப்பு மோதல் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் காயம் :போலீசார் துப்பாக்கி சூடு

Added : ஏப் 01, 2013
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், கிரிக்கெட் போட்டி தகராறில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார் காயமடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த, போலீசார் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர். தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில், நேற்று மதியம், இளைஞர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தினர். இதில் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்; மேக்லின்ராஜ், அலெக்ஸ்ஜேம்ஸ், அன்னமேரி காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர், தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, தங்கச்சிமடம் போலீஸ் ஸ்டேஷன் முன், கோஷமிட்டனர். மற்றொரு தரப்பினர், போலீஸ் ஸ்டேஷன் மீது கல், பாட்டில்களை வீசினர். போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.போலீசார் காயம்: ­இதற்கிடையில், தங்கச்சிமடம் சர்ச், போலீஸ் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதியில் ஒரு தரப்பினர், திடீரென போலீசார், வேன் மீது கல்வீசினர்.

இதில், எஸ்.ஐ., ஞானசேகர போஸ், போலீசார் கோகுல கண்ணன், காத்தனன் காயம் அடைந்தனர். எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துப்பாக்கி சூடு: கலவர கும்பலை தடுக்க, போலீசார், வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைத்தனர். தங்கச்சிமடம் பகுதியில், கடைகள் அடைக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட 12 பேரை, மயில்வாகனன் எஸ்.பி., தலைமையில் போலீசார் பிடித்தனர். மாலை 4 முதல் 5:30 மணி வரை, மதுரை-ராமேஸ்வரம் இடையே பஸ்கள் நிறுத்தப்பட்டன. கலவரம் ஏன்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 19 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள், 15 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில் இல்லாத நிலையில், கிரிக்கெட் தகராறு வினையில் முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X