அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை புறக்கணிப்பு

Added : ஏப் 03, 2013
Advertisement

சென்னை:தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர, அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
சட்டசபையை நேற்று புறக்கணித்தனர்.இதுகுறித்து, சட்டசபைக்கு வெளியே ஸ்டாலின் கூறியதாவது:தி.மு.க., சார்பில், தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது விவகாரத்தை, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக விவாதிக்க அனுமதி கோரினோம். இரு நாட்களாக இதற்கு, சபாநாயகர் அனுமதி தரவில்லை.டாக்டர் கருணாநிதி, சிவந்தி ஆதித்தனாரின் குடும்ப டாக்டர். இவர் மீது, பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனாரை, முதல்வர் நேரில் நலம் விசாரிக்க சென்றார்.அப்போது, டாக்டர், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியின், "ஷூ' வை தான் கழற்றச் சொன்னார்.

முதல்வரின், "ஷூ'வை அல்ல. "கருணாநிதி' என்ற பெயரை கொண்டதால், ஆத்திரத்தில் அவர் மீது, பல பிரிவுகளில், காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.அவரை, கொலை மற்றும் கொள்ளைக்காரனை போல நடத்தி உள்ளனர். இரவு நேரத்தில், அவரது வீட்டிற்கு சென்று, கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, அவர் ஜாமின் பெற்றுள்ளார்.இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மருத்துவ மற்றும் அகில இந்திய மருத்துவ துறை சங்கங்கள், வரும், 6ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கு காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையை குறைக்க, இப்பிரச்சனை குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக விவாதிக்க அனுமதி கோரப்பட்டது. இதற்கு, சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. மேலும், தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் இருவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.இந்த இரண்டையும் எதிர்த்து, சபையை புறக்கணிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X