அரசியல் செய்தி

தமிழ்நாடு

மற்ற மாநகராட்சிகளுக்கும் மலிவு விலை உணவக திட்டம் விரிவாக்கம்:முதல்வர் ஜெ., அறிவிப்பு

Added : ஏப் 03, 2013
Advertisement

சென்னை:""சென்னையில் இயங்கும் மலிவு விலை உணவகங்கள் திட்டம், மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கவன ஈர்ப்புவிலைவாசி உயர்வு குறித்து, சட்டசபையில் நேற்று, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது:
மார்க்சிஸ்ட் - பாலகிருஷ்ணன்: அத்தியாவசிய பொருட்களான, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இருப்பினும், மாதந்தோறும் உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் - சுந்தரம்: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி: அரிசி, பருப்பு ஆகிய உணவு பொருட்களின் விலை, கடந்த இரு வாரத்தில், மூட்டைக்கு, 50 முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நடுத்தர குடும்பத்தினர் வாங்கும் விலையில், அனைத்து அத்தியாவசிய பொருட்களும், தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை வேண்டும்.இதற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:மத்திய அரசின் தவறான கொள்கைகளே, தற்போதைய விலைவாசி உயர்விற்கான காரணம். பொருட்களின் விலையை நிர்ணயிக்கும், பெரும்பாலான கொள்கைகளை வகுக்கும் அதிகாரங்கள் அனைத்தும், மத்திய அரசிடம் உள்ளது.வளர்ச்சியடைந்த நாடுகளில், வேளாண் தொழிலுக்கு அதிக மானியம் அளிக்கப்படுகிறது. இதற்கு முற்றிலும் எதிரான கொள்கை தான், இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.விலைவாசியை கட்டுப்படுத்த, உரம் மீதான, "வாட்' வரியை, தமிழக அரசு நீக்கியது. இந்நடவடிக்கை, விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்குமே தவிர, விலைவாசி உயர்வை, முற்றிலும் தடுத்த நிறுத்த முடியாது.தொடர் துயரம்
எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கி உள்ளது. மத்திய அரசின் இந்த செயல், ஒரு முடிவடையாத தன்மை கொண்ட தொடர் துயரமாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில், மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே, ஓரளவுக்கு விலைவாசியை கட்டுப்படுத்த முடியும்.டீசல் விலையிலும், இரட்டை விலையை, மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்தன. இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை பெற்றது.நியாய விலைவிவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிச் சந்தையில் விற்கப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த, விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து, 25 கோடி ரூபாய் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அரிசி விலையை உடனே கட்டுப்படுத்த, அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், ஒரு லட்சம் டன் அரிசியை, கிலோ ஒன்றிற்கு, 20 ரூபாயில், வெளிச் சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விற்பனை விரைவில் துவங்கும்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 10 ஆயிரம் டன் சன்னரக அரிசி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி அனைத்தும், வெளிச் சந்தையில்,
நுகர்வோருக்கு அடக்க விலையில் வழங்கப்படும்.சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்திட்டம், 2014 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது.பொதுமக்களுக்கு, நியாயமான விலையில், அத்தியாவசிய பொருட்கள் வழங்க, 50 கோடி ரூபாய் வட்டியில்லா நிதி வழங்க, நிலைப்படுத்தும் நிதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ய, இந்த நிதியின் அளவு, 100 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.நகர்ப்புற பகுதிகளில், காய்கறி விலையை கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் தோட்டக்கலை மூலம், விவசாயிகளையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கும், பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள்
திறக்கப்படும்.சென்னை மாநகராட்சி மூலம், 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இத்திட்டம், இதர மாநகராட்சிகளுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X