அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின்வெட்டு பிரச்சனை இருந்தாலும் தொழில் துவங்குவதில் அதிக ஆர்வம்

Added : ஏப் 03, 2013
Advertisement

சென்னை:""தொழில் முனைவோர் எண்ணிக்கை குறையவில்லை,'' என, அமைச்சர் மோகன் தெரிவித்தார்.சட்டசபையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பாண்டியராஜன் பேசியதாவது:சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில், பீகார் கூட, மூன்று மடங்கு அளவிற்கு, வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழகம், அந்தளவிற்கு வளரவில்லை. இதற்கு, மின்வெட்டு, போதிய சலுகைகள் இல்லாதது, அதிக வட்டி வகிதம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.கடந்த ஆண்டு, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக 1,000 பேரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 25 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இலக்கை எட்டவில்லை.மோகன்-குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர்: இந்த திட்டம், ஆண்டின் கடைசியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எட்டு மாவட்டங்களில், 300 பேர், உரிய பயிற்சியை பெற்று, பலன்களை பெற்றுள்ளனர். இலக்கை எட்ட, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.இந்திய கம்யூனிஸ்ட் - ஆறுமுகம்: கோவை உள்ளிட்ட இடங்களில், மின்வெட்டு பிரச்சனையால், புதிய தொழில் துவங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருக்கின்ற தொழில்களும் மூடப்பட்டு வருகின்றன.அமைச்சர்: கடந்த ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி, சிறு, குறு, நடுத்தர தொழில் பதிவு செய்தோர் எண்ணிக்கை, 6.28 லட்சமாக இருந்தது. இது, கடந்த பிப்ரவரி 28ம் தேதி நிலவரப்படி, 8.33 லட்சமாக உயர்ந்துள்ளது. புதிதாக சிறு, குறு தொழில் செய்ய வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. கோவையில் மட்டும், 7,031 பேர் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X