சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் பா.ஜ., மாஜி கவுன்சிலர் கொலை : மதுரை கூலிப்படையினர் கைது

Updated : ஏப் 06, 2013 | Added : ஏப் 06, 2013
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பரமக்குடியில் மார்ச் 19 ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, "பைப்' குண்டுகள் வீசியும், ஆயுதங்களால் வெட்டியும் கொல்லப்பட்டார். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர். இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003 ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர்.முருகன், "பணம் தரமாட்டோம்' என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X