தானே அடுக்கு மாடி கட்டட இடிபாடு பலி 72 ஆக உயர்வு: 29 மணி நேரத்திற்கு பின், 10 மாத குழந்தை மீட்பு

Updated : ஏப் 07, 2013 | Added : ஏப் 06, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement
தானே அடுக்கு மாடி கட்டட இடிபாடு பலி 72 ஆக உயர்வு: 29 மணி நேரத்திற்கு பின், 10 மாத குழந்தை மீட்பு

தானே: தானே அருகே அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், பலியானோர் எண்ணிக்கை, 72ஆக உயர்ந்துள்ளது. 29 மணி நேரத்திற்குப் பின், 10 மாத குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. 43 மணி நேரம் நடந்த மீட்புப் பணி, நேற்று மதியம் முடிவடைந்தது.
மகாராஷ்டிரா மாநிலம், தானேயின், ஷில் பாட்டா பகுதியில், கடந்த வியாழக்கிழமை மாலை, ஏழு அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில்...: இதில், அந்த கட்டடத்தில் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு மாடி வீடுகளில் வசித்தவர்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட, மூன்று அடுக்குமாடி கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் என, ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடன், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் நிவாரண மீட்புப் படையினர் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டதில், நேற்று வரை, 62 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இறந்த, 72 பேரின் உடல்களும் கண்டு பிடிக்கப்பட்டன. இறந்தவர்களில், 22 பேர் பெண்கள், 17 பேர் குழந்தைகள். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த, 60 பேரில், 36 பேருக்கு, பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் எல்லாம், தானேயை சுற்றியுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியின் போது, கட்டடம் இடிந்து விழுந்து, 29 மணி நேரத்திற்குப் பின், இடிபாடுகளில் இருந்து, 10 மாத குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெயர் யாருக்கும் தெரியாது என்பதால், மருத்துவமனை ஊழியர்களே, அக்குழந்தைக்கு, "குடியா' என, பெயரிட்டுள்ளனர்.

மீட்பு: குழந்தைக்கு யாரும் உரிமை கோராததால், அதன் குடும்பத்தினரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதேபோல், 65 வயது நபர் ஒருவரும், 30 மணி நேரத்திற்குப் பின், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார். அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது தொடர்பாக, கட்டடத்தை கட்டிய, பில்டர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இதே பில்டர்களே, அருகில் மற்றொரு அடுக்கு மாடி கட்டடத்தையும், சட்ட விரோதமாக கட்டி வந்ததால், அந்த கட்டடத்தை இடிக்கும் பணியில், தானே நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏழு அடுக்கு மாடி கட்டட இடிபாடுகளை அகற்றி, உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணி, 43 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. 90 பேர் குழுவினர் மேற்கொண்ட, இப்பணி நேற்று மதியம் முடிவுக்கு வந்தது.

"சஸ் பெண்ட்': இதற்கிடையில், கட்டடத்தை கட்டிய பில்டர்களுடன் இணைந்து செயல்பட்டதோடு, பணியில் கவனக் குறைவாக இருந்ததற்காக, தானே மாநகராட்சி துணை ஆணையர் தீபக் சவான் மற்றும் கட்டடம் உள்ள பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர், "சஸ் பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலான அதிகாரியின் விசாரணைக்கும், மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவி ராஜ் சவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
azeem - madurai,இந்தியா
07-ஏப்-201313:25:46 IST Report Abuse
azeem ஒரு பொறியாளருடைய மேர்பார்வையில்லாமல் யாரும் கட்டடம் கட்டக்கூடாது என்றே சட்டம் இருக்கவேணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X