குட்டியை கொன்ற பாம்பை கடித்து குதறிய தாய் பூனை

Added : ஏப் 06, 2013 | கருத்துகள் (10)
Share
Advertisement
குட்டியை கொன்ற பாம்பை கடித்து குதறிய தாய் பூனை

நகரி: குட்டிப் பூனையை கொத்தி கொன்ற நாகப்பாம்பை, அதே இடத்தில், கடித்து கொன்று, தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டது தாய்ப்பூனை. ஆந்திர மாநிலம், கர்னூல் மாட்டம், சாகலமர்ரி நகரில், ராமகுருவி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலை அருகேயுள்ள வீடு ஒன்றில், ஒரு தாய்ப்பூனை மற்றும் குட்டிப் பூனையை, ராமகுருவி வளர்ந்து வந்தார். அவர் தினமும் பூனைக்கு, கிண்ணத்தில் பால் ஊற்றி வைப்பார். அதை தாய்ப்பூனையும், குட்டிப் பூனையும் சேர்ந்து குடிக்கும். அதேபோல், நேற்று முன் தினமும், பூனைக்கு கிண்ணத்தில் பால் ஊற்றினார் ராமகுருவி. அப்போது, வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு ஒன்று, பால்கிண்ணம் அருகே வந்தது. அந்த நேரத்தில், கிண்ணத்தில் இருந்த பாலை குட்டிப்பூனை குடிக்க முற்பட்ட போது, பாம்பு அதை கொத்தியது. இதில், குட்டி பூனை கதறி அழுத சப்தம் கேட்டு, தாய்ப்பூனை ஓடி வந்தது. தன் குட்டியை கடித்த பாம்பை, ஆவேசத்தில் கடித்து குதறியது. இதில், பாம்பு பரிதாபமாக இறந்தது. இதற்குள் பாம்பு கொத்தியதால், குட்டிப்பூனையும் உயிரை விட்டது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - Solapandiyapuram,இந்தியா
09-ஏப்-201309:32:17 IST Report Abuse
Suresh அம்மா... மூன்றே எழுத்தில் - ஒரு முழு கடவுள் ...... எப்பொழுதும் என்றென்றும் தெளிவாக உள்ள - ஒரு நீரோடை.... எதையும் எவரிடத்தும் எதிர்பார்க்காத - ஒரு யதார்த்தம்... உனக்காகவும் எனக்காகவும் தன்னையே தானம் செய்யும் - ஒரு தியாகம்...
Rate this:
Cancel
Tamilan - Bangalore,இந்தியா
07-ஏப்-201319:08:59 IST Report Abuse
Tamilan பாம்பு பரிதாபமாக இறந்தது. இதற்குள் பாம்பு கொத்தியதால், குட்டிப்பூனையும் உயிரை விட்டது. இதில் பரிதாபமாக இறந்தது குட்டி பூனை தான்.
Rate this:
Cancel
Aleem Raja - kampala,உகான்டா
07-ஏப்-201315:46:03 IST Report Abuse
Aleem Raja தாயன்புக்கு நிகரேது..................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X