ஸ்ரீநகரில் பிரிட்டன் பெண் குத்திக்கொலை: நார்வே நாட்டு நபரிடம் தீவிர விசாரணை

Added : ஏப் 06, 2013
Share
Advertisement
ஸ்ரீநகரில் பிரிட்டன் பெண் குத்திக்கொலை: நார்வே நாட்டு நபரிடம் தீவிர விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த பிரிட்டன் பெண் ஒருவர், படகு வீட்டில் குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த, 25 வயது இளம் பெண் ஒருவர், ஸ்ரீநகர் உள்ள தால் ஏரியில் இயக்கப்படும் படகு வீட்டில், கடந்த இரண்டு மாதங்களாக தங்கியிருந்தார். நேற்று முன் தினம் இரவு, அவர் தன் அறையில், குத்திக் கொல்லப்பட்டார். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரைப் பார்த்த, படகு வீட்டினர், நேற்று காலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பாலியல் பலாத்காரம்: இதுதொடர்பாக, ஸ்ரீநகர் போலீஸ் கண்காணிப்பாளர் சாஜித் கூறியதாவது: படகு வீட்டில் கொல்லப்பட்ட பெண்ணின் அருகே கத்தி ஒன்று கிடந்தது. பெண்ணின் உடலில், பல இடத்தில் கத்தியால் குத்தப்பட்டிருந்தன. அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிரிட்டன் பெண் தங்கியிருந்த, அதே படகு வீட்டில் இருந்த, நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரே, அவரை குத்திக் கொன்றிருக்கலாம் என, நம்பப்படுகிறது. ஏனெனில், அந்த நபர்தான், சிறிய படகு ஒன்றின் மூலம் கரைக்கு வந்து, தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அவரை ஸ்ரீநகரிலிருந்து, 75 கி.மீ., தொலைவில், போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததோடு, கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளியிட முடியாது: கொலையான பெண் மற்றும் பிடிபட்டுள்ள நார்வே நபர் பற்றிய விபரங்களை, தற்போது வெளியிட இயலாது. இவ்வாறு சாஜித் கூறினார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மாதம், மத்திய பிரதேசத்தில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது, ஜம்மு - காஷ்மீரில், பிரிட்டன் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X