பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்

Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (13)
Share
Advertisement
நாளை முதல் பாஸ்போர்ட்டில்  மாற்றம்

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள், நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல், வலது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால், தற்போதைய புதிய நடைமுறைப்படி, இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில், "லேமினேட்' செய்யப்படும். அதேபோல், வலது பக்க உள் அட்டையில், காணப்படும் அனைத்து குறிப்புகளும், 35வது பக்கத்தில், லேமினேட் செய்யப்படும்.

இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியதாவது: பழைய முறையில், பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால், அதன், இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இம்மாற்றங்கள், நாளை முதல், அமலுக்கு வருவதால், புதிய மாற்றங்கள் அடங்கிய, 50 ஆயிரம் பாஸ்போர்ட்கள், நாசிக்கிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sairam Sairam - muscat,ஓமன்
19-ஏப்-201312:17:30 IST Report Abuse
Sairam Sairam இங்கு கருத்து சொன்னவர்கள் தரம் பற்றி பேசுகிறார்கள். நமது பாஸ்போர்ட் எந்த நாட்டுடைய பாஸ்போர்ட்டையும் விட குறைந்தது கிடையாது. சும்மா kuttam சொல்ல கூடாது. கவனமா பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.. அதை உணரவும். பின்னர் குறை சொல்லலாம்.
Rate this:
Cancel
azhagurajan - salalah,ஓமன்
14-ஏப்-201313:02:12 IST Report Abuse
azhagurajan பாஸ்போர்ட் மாற்றுவது நல்லது தான். பழைய பாஸ் போர்டையும் கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா
Rate this:
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
10-ஏப்-201311:31:55 IST Report Abuse
Rangarajan Pg அது சரி தற்போது புழக்கத்தில் இருக்கும் பாஸ்போர்ட்களை என்ன செய்ய போகிறார்கள். அதை நாங்கள் SURRER செய்து புது வடிவ பாஸ்போர்ட் பெற்று கொள்ள வேண்டுமா அல்லது அது EXPIRE PERIOD வரை இதையே வைத்திருக்கலாமா? பாஸ்போர்ட் புதிதாக டிசைன் செய்யும்போது சிறிது அதை மெருகேற்றினால் தேவலை. மற்ற நாட்டு பாஸ்போர்ட்கலை COMPARE செய்யும்போது நம் பாஸ்போர்ட் தரத்திலும் சரி பார்ப்பதற்கும் மிக கேவலமாக உள்ளது. LAMINATION சீக்கிரமே பிரிந்து விடுகிறது. உள்ளே உள்ள தாள்கள் நிறம் மங்கி விடுகிறது. அதே போல நமது நாட்டு பாஸ்போர்ட்களை TECHNICALLY UPGRADE செய்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Suprajaa Sridaran - Kualalumpur,மலேஷியா
12-ஏப்-201309:29:49 IST Report Abuse
Suprajaa Sridaranபழைய பாஸ் போர்டுகள் அப்படியேதான் இருக்கும்.அது கலாவதி ஆகும் நேரத்தில் புதிய வடிவில் வழங்கப் படும்.முகவரி மாற்றம் அதிகப் பக்கங்கள் கொண்ட பாஸ் போர்ட் வாங்கும் போதும் மாற்றித் தரப் படும்.இது அங்கு பெற்ற தகவல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X