சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாமி சிலை சேதம்: பொதுமக்கள் ரோடு மறியல்

Added : ஏப் 08, 2013
Advertisement

குறிச்சி : கோவை, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள, கோவிலின் முன் இருந்த, சாமி சிலையை சேதப்படுத்தியவர்களை, கைது செய்யக் கோரி, பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். கோவை, குனியமுத்தூர் ரோட்டிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் முன் உள்ள மரத்தின் அடியில், சாமி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, கோவில் பணியை மேற்கொள்ளும், குணவேல் என்பவர், 8:00 மணிக்கு, அங்கு வந்தார். மரத்தடியில் இருந்த சாமி சிலையை யாரோ சேதப்படுத்தியிப்பது கண்டு, திடுக்கிட்டார். சமுதாய பொறுப்பாளர்கள் மற்றும் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். காலை 10:30 மணியளவில்,பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் உதவி கமிஷனர் மனோகரன், அவர்களை சமாதானம் செய்தார். மதியம் 1:45 மணியளவில், ஆர்.டி.ஓ., சாந்தகுமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், ""தேவையான பாதுகாப்பு செய்து தரப்படும்,'' என்றார். மற்றொரு பிரிவை சேர்ந்த சிலர், மொபைல்போனில், இச்சம்பவங்களை படம் பிடித்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள், அவர்களை அங்கிருந்து துரத்
தினர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்," சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உறுதியளித்தார். இதையடுத்து, 2:15 மணியளவில், மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், மற்றொரு தரப்பினர், சுண்ணாம்பு காளவாய் பகுதியில், 3:00 மணியளவில், ரோடு மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸ் கமிஷனரிடம்," தங்களை தாக்க முற்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோரினர். அவர்களை கமிஷனர் சமாதானம் செய்தார். தொடர்ந்து அனை வரும் 4:00 மணியளவில், கலைந்து சென்றனர். இம்மறியலால், காலை 10:30 முதல் மதியம் 2:15 மணி வரையும், மாலை 3:00 - 4:00 மணி வரையும், ஆத்துபாலம் - குனியமுத்தூர் ரோட்டில், போக்கு
வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X