யாக குண்டத்தில் குதித்து மூன்று மடாதிபதிகள் தற்கொலை

Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (13)
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவில், சவ்லி மடத்தில், மூன்று இளைய மடாதிபதிகள், யாக குண்டத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.பீதர் மாவட்டத்தில் உள்ளது, சவ்லி மடம். பழமை வாய்ந்த இந்த மடம், ரெட்டி சமூகத்தினருக்கு சொந்தமானது. இந்த மடத்தின் தலைமை மடாதிபதி, கணேஷ் மகா சுவாமி.இளைய மடாதிபதியாக இருந்த, மாருதி சுவாமி, 2013, ஜனவரி முதல், மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால்,
யாக குண்டத்தில் குதித்து மூன்று மடாதிபதிகள் தற்கொலை

பெங்களூரு : கர்நாடகாவில், சவ்லி மடத்தில், மூன்று இளைய மடாதிபதிகள், யாக குண்டத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பீதர் மாவட்டத்தில் உள்ளது, சவ்லி மடம். பழமை வாய்ந்த இந்த மடம், ரெட்டி சமூகத்தினருக்கு சொந்தமானது. இந்த மடத்தின் தலைமை மடாதிபதி, கணேஷ் மகா சுவாமி.இளைய மடாதிபதியாக இருந்த, மாருதி சுவாமி, 2013, ஜனவரி முதல், மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மடாதிபதி தான், அவரை கொன்று விட்டார் என, பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால், மனம் உடைந்த, தலைமை மடாதிபதி கணேஷ் மகா சுவாமி, கடந்த பிப்ரவரி, 28ம் தேதி இரவு, கோயில் கருவறையில் உள்ள சிவன் சிலை மீது, கடிதம் எழுதி வைத்து விட்டு, கருவறைக்குள்ளேயே தற்கொலை செய்தார்.


யாக குண்டம் அமைப்பு :

அதன் பின், புதிய தலைமை மடாதிபதியாக, யாரும் நியமிக்கப்படவில்லை. மற்ற இளைய மடாதிபதிகளான, ஈரெட்டி சுவாமி, 45, ஜகன்னாத் சுவாமி, 24, பிரணவ் சுவாமி, 18, ஆகிய மூன்று பேரும், மடத்தை பராமரித்து வந்தனர்.இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். நேற்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, "மளமள'வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்து, தீயில் கருகி இறந்தனர். தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர்.

இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், "எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், ""போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,'' என்றார்.

மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், ""மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார்.

பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், ""இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தாக்குதல் புகாரும், தற்கொலையும்!

காணாமல் போனதாக கூறப்படும், இளைய மடாதிபதி மாருதி சுவாமிகளை, 2012 டிசம்பர், 31ம் தேதி, சமூக விரோதிகள் சிலர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து, மறு நாளான, 2013 ஜனவரி, 1ம் தேதி, பீதர் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. இப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனவரி, 31ம் தேதி, மடத்திலிருந்து மாருதி சுவாமிகள், திடீரென காணாமல் போயுள்ளார். அவர் கடத்தப்பட்டதாக, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.


ஜீவ சமாதி அறிவிப்பு:

கடந்த பிப்ரவரி, 6ம் தேதி, மடத்தில் நடந்த ஆன்மிக கூட்டத்தில் பங்கேற்ற, கணேஷ் சுவாமிகள், "இது என்னுடைய கடைசி பொது நிகழ்ச்சி. நான் ஜீவ சமாதி அடையப் போகிறேன்' என்றார்.அதிர்ச்சியடைந்த பொது மக்கள், முடிவை மாற்றிக் கொள்ளும்படி கூறினர்.எப்போதும், காலை, 10:00 மணிக்கெல்லாம் தன் அறையிலிருந்து வெளியே வந்து தரிசனம் தரும் கணேஷ் சுவாமிகள், பிப்ரவரி, 28ம் தேதி, காலை, 11.30 மணியாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மடத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் அங்கு இல்லை; கோவில் கருவறையில் பிணமாக கிடந்தார்.அங்கு கண்டுபிடிக்கப்பட்ட, அவரின் கடிதத்தில்,"மாருதி சுவாமிகளை சமூக விரோதிகள் தாக்கிய புகாருக்கும், அவர் கடத்தப்பட்டதாக மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீதே பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்' என, குறிப்பிட்டிருந்தார்.இதைத் தொடர்ந்து, இளைய மடாதிபதிகள் மூவர், நேற்று தற்கொலை செய்தது, சவ்லி மடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
09-ஏப்-201323:41:16 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi இதில் மிகப் பெரிய மர்மம் இருக்கும் என்று தெரிகிறது.நடந்த குற்றங்களின் பின்னணியை ஆராய்ந்து தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொல்லப் பட்டார்களா என்பது இறைவன் நாடினால் வெளி வரும்.சிபிஐ விசாரணை நடந்தால் உண்மைகள் வெளிவர சாத்தியம் இருக்கிறது.இது போன்ற இடங்களில் செக்யூரிட்டி கேமராக்கள் பொறுத்த வேண்டும்.அப்போதுதான் ஓரளவு உண்மைகள் வெளியில் வரும்.
Rate this:
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
09-ஏப்-201320:48:48 IST Report Abuse
amukkusaamy மற்றவர்க்கு மன அமைதியை தருவதற்காக இறைவன் திருவடியை போற்றும் இவர்களின் மன அமைதிக்கு இறைவனை நம்பாமல் தன இன்னுயிரை மாய்த்துக்கொள்ளவா இறைவன் சொன்னான்? இல்லவே இல்லை. இதுவும் ஒரு சோதனை. இதில் நாம் வெற்றி பெறுவதற்கு மீண்டும் அவன் பாதங்களை விடாது பற்றிக்கொள்ளவேண்டும்.. மார்க்கண்டேயனைப்போல. "சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருள்வது இனியே" என்று திருவாசகத்தில் சொன்னாரே மாணிக்கவாசகர், நமக்குத்தானே சொன்னார். இறைவன் அளித்த இந்த உயிரை எடுத்துக்கொள்ளும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு. இதே கருத்தைத்தான் பிற மதங்களும் சொல்கின்றன.
Rate this:
Cancel
japaankaaran - Tokyo,ஜப்பான்
09-ஏப்-201314:51:03 IST Report Abuse
japaankaaran போப் குரான் படிக்கிறார். சன்யாசிகள் தற்கொலை செய்கிறார்கள். முஸ்லிம்கள் பல நாட்டில் கொல்லபடுகிறார்கள். எல்லாம் உலகம் அழிவதற்கான அறிகுறி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X