சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீட்டில் புகுந்து 25 சவரன் அபேஸ்

Added : ஏப் 08, 2013
Advertisement

செம்பாக்கம்:திருப்போரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.திருப்போரூர் அடுத்த செம்பாக்கம், நடுத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்,75. இவர், அதே பகுதியில் உள்ள குமார தேவர் மடத்தின் அறங்காவலராக உள்ளார். இவர், கடந்த 10 நாட்களுக்கு முன், தனது குடும்பத்துடன், விருத்தாசலத்தில் நடைபெற்ற, ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலி, சுவாமி வில்வ மாலை உட்பட 25 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்கள் மர்ம நபர்களால், திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து, அவரது மகன் வசுவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், திருப்போரூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இப்பகுதியில், பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், பள்ளி ஆசிரியர் உட்பட இருவரின் வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். எனவே, இவற்றை தடுக்க, காவலர்கள் இரவு நேரங்களில், ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X