உத்திரமேரூர்:பெருநகர் அருகே, மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, குழந்தையுடன் தப்பியோடிய கணவனை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.பெருநகர் அடுத்த, மானாம்பதி கண்டியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 40. அனுமந்தண்டலம் பகுதியில் உள்ள, அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பேரரசி, 32. இவர், வி‹ர் பகுதியில் உள்ள, அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு, திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. விஷ்வா, 2. என்ற குழந்தை உள்ளது.கமலக்கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், கணவன், மனைவி இடையே, அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, கமலக்கண்ணன் மது அருந்தி விட்டு,வீட்டிற்கு சென்றார். இதனை, பேரரசி கண்டித்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பேரரசி, அலைபேசியில் தன் சகோதரனை தொடர்பு கொண்டு, வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார்.இதில், ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், மனைவியின் தலையைப் பிடித்து சுவரில் மோதினார். இதில், பேரரசி மயங்கி விழுந்தவுடன், கமலக்கண்ணன், கயிற்றால், மனைவியின் கழுத்தை இறுக்கினார். சற்று நேரத்தில், மூச்சு திணறல் ஏற்பட்டு, பேரரசி இறந்தார்.இதையடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, கமலக்கண்ணன் தலைமறைவானார். நள்ளிரவு, 12:30 மணிக்கு, அங்கு வந்த பேரரசியின் சகோதரர் ரங்கநாதன், அக்கா இறந்து கிடப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், பெருநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, குழந்தையுடன் தப்பியோடிய, கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE