பொது செய்தி

தமிழ்நாடு

வில்லியம்பாக்கத்தில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு

Added : ஏப் 10, 2013
Advertisement

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில், புளிய மரத்திற்குள் புதையுண்டிருந்த, மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
செங்கல்பட்டிலிருந்து 7 மீட்டர் தொலைவில் வில்லியம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, ஒரு புளிய மரத்தின் அடியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரர் தீர்த்தங்கரர், தியானத்தில் அமர்ந்த நிலையிலும், அசோக மரத்தோடு, தலைக்குமேல் முக்குடை, இருபுறம் சாமரம் வீசுவோர் என, மூன்று அடி உயர சிலை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருப்பருத்திக்குன்றம், வேண்பாக்கம், கரந்தை, திருப்பனமூர், ஆற்ப்பாக்கம் ஆகிய கிராமத்தில் ஜைனர்கோவில் உள்ளது. இக்கோவில்களில் பல்லவர்கால கல்வெட்டு உள்ளது. இங்கு ஜைனர்கள் அதிகமாக வசிக்கின்றனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் கிராமத்தில், முன்பு ஜைனர்கள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக, தற்போது சிலை கிடைத்து உள்ளது.
திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ஜீவகுமார் கூறுகையில், ""வில்லியம்பாக்கம் கிராமத்தில் கிடைத்துள்ள மகாவீரர் சிலையை, சென்னை, ஜைன இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள், நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, இங்கு பொதுமக்கள் ஆதரவுடன், கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் கட்ட இடம் ஒதுக்குமாறு, ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவரும், இடம் தருவதாக உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X