பதிவு செய்த நாள் :
கருத்துகள் (29)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: தங்கம் விலை தொடர் சரிவால், வாடிக்கையாளர்களின் நகைகளின் மீது, 95 சதவீதம் கடன் வழங்கிய, தனியார் நிதி நிறுவனங்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளன. நகைகளை திருப்பும்படி வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க பொருளாதார எழுச்சி, தங்க முதலீட்டாளர்கள் பங்கு சந்தை பக்கம் திரும்புவது போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம், 22 காரட், ஒரு பவுன் ஆபரணத் தங்கம், 22,240 ரூபாய்க்கு விற்கப்பட்டு, ஏப்ரல், 15ம் தேதி, 20,640 ரூபாய், நேற்று முன்தினம் 19,520 ரூபாயாக குறைந்தது. விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என, தகவல் பரவுவதால், உடனடியாக தங்கத்தை வாங்கவும், காத்திருந்து வாங்கவும் பலர் திட்டமிட்டு வருகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ரிசர்வ் பாங்க் ஆலோசனைப்படி, வாடிக்கையாளர் நகை மீது வழங்கப்படும் கடன் தொகை, கிராமிற்கு 1,200 ரூபாய் வரை குறைத்துள்ளனர். அரசு வங்கிகளை தொடர்ந்து, தனியார் வங்கிகளும், இதே முடிவை கையாண்டுள்ளன. ஆனால், தனியார் நகை கடன் வழங்கும், நிதி நிறுவனங்கள், அடகு கடைகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளன. வாடிக்கையாளர் தங்க நகை மீது, 95 சதவீதம் வரை கடன் வழங்கியதால், தங்கத்தின் விலை சரிவால் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதுபற்றி தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கியின் மேலாளர் ஒருவர் கூறியதாவது: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் மற்றும் தனிநபர் பிரிவில், தங்க நகை கடன் வழங்குகிறது. விவசாயிகளுக்கு, 9 சதவீத வட்டியில், இரண்டு லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்குகிறது. சரியான காலக்கெடுவுக்குள் திருப்பி செலுத்தினால், 5 சதவீத வட்டிக்கு, ரிசர்வ் வங்கி விலக்கு அளிக்கிறது. தனி நபருக்கு தங்க நகை கடனாக, இரண்டு லட்சம் ரூபாய், 10.5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு, கடந்த வாரம் வரையில், 2,100 ரூபாய் வழங்கப்பட்டது. தங்கம் விலை சரிவால், கிராமுக்கு, 1,700 ரூபாய் கடன் வழங்கும் அளவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி தங்க நகை கடன் வழங்குகிறோம். தங்கத்தின் விலைக்கும், கடன் வழங்கும் தொகைக்கும் இடைப்பட்ட அளவீடு, 70 முதல், 75 சதவீதமாக உள்ளன. 15 முதல், 20 சதவீதம் வாடிக்கையாளரின் தங்கம், நகையாக வங்கியில் உள்ளதால், அரசு வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

இழப்பு: வெளிமார்க்கெட் தங்கத்தின் விலையில், 95 சதவீதம் கடனாக வழங்கிய, தமிழக, கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளுக்கு, 5 முதல், 7 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை, சவரனுக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் சரியக்கூடும் என்பதால், நிதி நெருக்கடியில் மூழ்குவதில் இருந்து தப்பிக்க, தங்களின்

Advertisement

வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தங்கத்தை திரும்ப பெறும்படியும், இழப்பீட்டு தொகையை செலுத்தும் படியும், நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இழப்பீட்டு தொகை செலுத்தாவிட்டால், நகை உடனடியாக ஏலத்துக்கு கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள், இந்த தனியார் நிறுவனங்கள் வராததால், நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

சவரனுக்கு ரூ.112 உயர்வு
: சில நாட்களாக குறைந்திருந்த, தங்கத்தின் விலை, நேற்று, சவரனுக்கு, 112 ரூபாயாக சற்று அதிகரித்து காணப்பட்டது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,425 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,400 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 25,935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று, தங்கம் கிராமுக்கு, 14 ரூபாய் என சற்று உயர்ந்து, 2,439 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன், 112 ரூபாய் அதிகரித்து, 19,512 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 150 ரூபாய் உயர்ந்து, 26,085 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி, கிராமுக்கு, 30 காசு உயர்ந்து, 48.30 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி, 290 ரூபாய் அதிகரித்து, 45,105 ரூபாயாக உயர்ந்தது. தங்க நகை வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "தங்கம் விலை இனி குறைந்தால், கிராமிற்கு 100-200 ரூபாய் என்ற அளவில் தான் குறையும். விலை உயர்ந்தாலும், இதே அளவிற்கு தான் உயரும்' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஏப்-201319:30:16 IST Report Abuse
g.s,rajan Capture all the Black money in India,then the gold prices in India will fall down definitely to the previous price of Rs.4000 a carat.
Rate this:
Share this comment
Cancel
arun - Chennai,இந்தியா
19-ஏப்-201319:08:20 IST Report Abuse
arun கையில இருக்கு தங்கம்...கவலை ஏண்டா சிங்கம்.. இனியாவது நடிக, நடிகையர்கள் காசு வாங்கிகிட்டு உளறுவதை நம்பி ஏமாறாமல், சுயபுத்தியை பயன்படுத்துங்க ஐயா.. எத்தனை தடவை தான் சீட்டு கட்டி, ஈமு கோழி வளர்த்து எல்லாம் செஞ்சு ஏமாந்தாலும் புரிய மாட்டேங்குதே.. ஆட்டுக்கு வால அளந்துதான் வச்சிருக்கான் ஆண்டவன்..வெரலுக்கெத்த வீக்கம் வேணும்..இப்படியெல்லாம் மூத்தோர் சொன்னதெல்லாம் மறக்கலாமா..
Rate this:
Share this comment
Cancel
நான் கார்த்திகேயன் - Tiruvannamalai,இந்தியா
19-ஏப்-201317:21:35 IST Report Abuse
நான் கார்த்திகேயன் சமிபத்தில் நாங்கள் அடகு வைத்த நகைகளை மீட்க சொல்லி விட்டிற்கு லெட்டர் வந்தது. ஒரு வேளை நீங்கள் சொல்கிற காரணத்தில்தான் இருக்குமோ? எப்படியோ ரொம்ப அடகு கடையில் உறங்கி கொண்டு இருந்த நகை விட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசமே
Rate this:
Share this comment
Cancel
Vasan R S - chennai,இந்தியா
19-ஏப்-201317:16:49 IST Report Abuse
Vasan R S சாஞ்சா சாயர பக்கம் சாயும் செம்மறி ஆடுகளா என்ற திரைப்பட பாடல்தான் நினைவுக்கு வருகிறது. தேவைக்கு ஏற்ப தங்க நகைகள் வாங்குவதே புத்திசாலித்தனம். அதை விடுத்து ஏதோ தங்கத்தின் விலை அதல பாதாளத்துக்கு வீழ்ச்சி அடைந்து விட்டது போல் கடனை உடனை வாங்கி அல்லது முக்கியமான இதர செலவுகளுக்காக சேமித்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து தவிக்கும் நடுத்தர குடும்பங்கள் ஏராளம். சேமிப்பில் 10% மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்வதே சரி. தொலைகாட்சி சேனல் களும் மாயத்தோற்றத்தை மக்களிடம் திணிப்பதில் பெரும்பங்கு வஹிப்பதுதான் சோஹம்.
Rate this:
Share this comment
Cancel
Padmavathi - Chennai,இந்தியா
19-ஏப்-201315:33:06 IST Report Abuse
Padmavathi தனியார் நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், அடகு கடைகள், இழப்பு என்பது மக்களை ஏமாற்றும் வேலை. நகை மீது கொடுக்கும் கடனைவிட, அளவிற்கு அதிகமாகவே வட்டி வசூலித்து விடுகிறார்கள். இதில் 30 நாட்களுக்கு ஒரு வட்டி, அதற்குமேல் நாள் ஆனால் அதற்கு ஒரு வட்டி என்று வசூலித்து விடுகிறார்கள். அடகு வைத்தவரால் உடனடியாக திருப்பமுடியாமல் போனால் ஏலத்தில் விட்டு அவர்கள் கொடுத்த தொகையை விட அதிகம் பணம் எடுத்து விடுவார்கள். பிறகு எப்படி இவர்களுக்கு நஷ்டம் என்பது தெரியவில்லை, இதில் உண்மைய பாதிக்கபடுவது நடுத்தர குடும்பங்கள் தான்.
Rate this:
Share this comment
Cancel
Friend - Singapore,சிங்கப்பூர்
19-ஏப்-201314:59:58 IST Report Abuse
Friend இங்கே சில பேர் கூறிய கருத்துக்கள் ஆச்சரியத்தை தான் வரவழைக்கிறது. விளம்பரங்களில் ஆயிரம் போடுவார்கள். ஆனால் தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்கு ஒருவர் வரும் போது கூட யோசித்து செய்ய வேண்டும். பேராசையாக பெருத்த பணத்திற்கு பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் தனியார் நிறுவனங்களிடம் அடகு வைத்து விட்டு பிரச்சனை என்று வரும் போது நிறுவனங்களையும் நடிகர்களையும் குறை சொல்லி என்ன பயன்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201312:36:08 IST Report Abuse
Srinivasan Kannaiya கொள்ளுக்கு வாயை திறந்துவிட்டு கடிவாளத்துக்கு மூடினால் என்ன நியாயம் . தொடர்ந்து அல்வாவே கிடைக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201312:25:49 IST Report Abuse
பி.டி.முருகன்    விலை மேலும் கூடும் என்று தானே தனியார்கள் வாரி வாரி வழங்கினார்கள். இப்போது நிலைமை மோசமானதும் இறங்கி வந்தால் எப்படி? எந்த பயித்தியமாவது நகையை திருப்புமா? அனுபவிங்க மக்களே அனுபவிங்க.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Marthandam,இந்தியா
19-ஏப்-201312:06:39 IST Report Abuse
Suresh செய்கூலி சேதாரம் பற்றி இப்போ எல்லாம் விளம்பரம் வருதா?
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
19-ஏப்-201311:33:30 IST Report Abuse
GUNAVENDHAN தங்கத்தின் விலை கொஞ்சம் இப்போதைக்கு குறைந்தாலும், ஓரிரு மாதங்களிலேயே விலை எறத்துவங்கி விடும் என்பது நகை அடகு பிடிக்கும் நபர்களுக்கும் நன்கு தெரியும் , எனவே அவர்கள் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மற்றபடி ஒரேயடியாக ஒன்றும் விலையில் வீழ்ச்சி இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X