சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி

Added : ஏப் 19, 2013
Advertisement

வள்ளியூர்:ராதாபுரம் அருகே தோட்டத்திற்கு சென்று திரும்பிகொண்டிருந்த பெண்ணிடம் 7.5பவுன் தங்க செயினை பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.ராதாபுரம் அருகேயுள்ள லாத்திகுளத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் சென்னையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாப்பா (40). இவர் சீலாத்திகுளம் அருகேயுள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் பைக்கில் வந்த இருவர் பாப்பாவிடம் வழிகேட்பது போன்று பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாப்பாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர். இந்த செயின் 7.5பவுன் எடை கொண்டதாகும்.இச்சம்பவம் குறித்து பாப்பா ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். புகார் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து செயினை திருடி சென்ற மர்ம நபர்கள் இருவரையும் தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X