2 ஜி ஊழல்; பிரதமர்- சிதம்பரத்தை சிக்க வைக்க ராஜா களம் இறங்குகிறார்

Updated : ஏப் 19, 2013 | Added : ஏப் 19, 2013 | கருத்துகள் (59)
Share
Advertisement
 2 ஜி ஊழல்; பிரதமர்- சிதம்பரத்தை சிக்க வைக்க ராஜா களம் இறங்குகிறார்

புதுடில்லி: பல லட்சம் கோடி நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லி., கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இல்லை என்று கூறப்பட்டிருப்பதால் , இவர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை காட்டும் வகையில் தி.மு.க., வை சேர்ந்த மாஜி அமைச்சர் ராஜா சுப்ரீம் கோர்ட்டை அணுகவுள்ளார் என கூறப்படுகிறது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் விடாமல் முந்தி வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்டையில் பிரபல நிறுவனங்களுக்கு தாரை வார்த்த குற்றத்திற்காக ராஜா உள்பட 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரித்த பார்லி.., கூட்டுக்குழு தனது வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது . இந்த அறிக்கையில் பிரதமர், மற்றும் நிதி அமைச்சர் பொறுப்பாக முடியாது என்றும், ராஜாவே பொறுப்பு என்றும், சி.எ.ஜி., அறிக்கையில் இழப்பீடு தொகை தவறுதலாக புனையப்பட்டுள்ளது. பிரதமர் மீது தவறான தகவல் தரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் ராஜா சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஏலம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் பிரதமருக்கும், சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு. அனைத்து முடிவுகளும் இவர்களின் ஆலோசனைப்படியே எடுக்கப்பட்டது. எனவே அனைத்தும் இருவருக்கும் தெரியும் இது தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என்றும். இந்த ஆவணத்தை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதனால் வரும் ஏப்ரல் மாதம் 25 ம் தேதி பார்லி., கூட்டுக்குழு கூடவிருக்கிறது.இதற்கு முன்னதாக அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவார் என தெரிகிறது.உண்மைகள் வெளிவரும் :

சமீபத்தில் தி.மு.க, மத்திய அரசில் இருந்து வெளியேறியுள்ளது. கூட்டணி தர்மத்திற்காக இது வரை மறைக்கப்பட்ட உண்மைகளையெல்லாம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களை காத்துக்கொள்ள தி.மு.க, ஆலோசனையின்படி ராஜா பல வியூகங்களை கையாள்வார் என்றே தெரிகிறது.


கருணாநிதி ஆதரவு:

இந்த விஷயத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி ராஜாவுக்கு முழு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார் . ‌ஜே.பி.சி ., அறிக்கையையும் குறை கூறியிருக்கிறார். ஒரு பிரதமரை அமைச்சர் எப்படி தவறான வழிக்கு இழுத்து செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக ராஜாவிடம் பேசி அவருக்கு தேவையான உதவிகளை செய்‌யவும் தயாராக இருப்பதாக தி.மு.க., வட்டாரம் தெரிவிக்கிறது.

முறையான நீதி வேண்டும்: கருணாநிதி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் பார்லி., கூட்டுக்குழு அறிக்கை தொடர்பாக தி.மு.க,.தலைவர் கருணாநிதி கூறியதாவது : 2ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பிரதமர் தவறான வழி நடத்தப்பட்டுள்ளார் என்பதை ஏற்க இயலாது. ஒரு அமைச்சர் எப்படி இவ்வாறு இழுத்து செல்ல முடியும் ? சரியான வழியில் தீர்ப்பு வழங்க வேண்டும், முறையான நீதி கிடைக்க வேண்டும் என்பது சிலப்பதிகாரம் காலம் முதல் தொன்று தொட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

குற்றமற்றவன் என நிரூபிப்பேன்: ராஜா

2-ஜி வழக்கு விவகாரத்தில் ஜே.பி.சி.அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கூறியதாவது, இந்த வழக்கில் நான் குற்றமற்றவன் என நிரூபிப்பேன். ஜே.பி.சி.யானது எனது கோரிக்கைக்கு மதிப்பளித்து விசாரணைக்கு அழைக்கும் என நம்புகிறேன்.குற்றமற்றவன் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அனைத்து விஷயங்களையும் பிரதமரிடமும், சிதம்பரத்துடனும் கலந்து பேசிய பின்னரே முடிவு செய்தேன் . ஏறத்தாழ 100 பக்க அறிக்கையினை ‌ஜே.பி.சியிடம் அளிக்க உள்ளேன் என்றார்.
Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathya_9 - pune,இந்தியா
20-ஏப்-201308:39:50 IST Report Abuse
sathya_9 கபடி கபடி கபடி கபடி கபடி கபடி
Rate this:
Cancel
Manidhan - India,இந்தியா
20-ஏப்-201307:13:51 IST Report Abuse
Manidhan மத்திய அமைச்சர் செய்த தப்பு பிரதமருக்கு தெரியாமல் இருக்காது என்றால், திமுக அமைச்சர் K.N.Nehru அவன் தம்பி மக்களுக்கு துன்பங்களை வாரி வாரி வழங்கிய கர்ணன் பெண்களை கவுரவ படுத்த வீட்டுக்கு கடத்தி செல்லும் மன்னன் மர்ம உறுப்பை வாயில் வைத்தபடி கொலை செய்யப்பட்ட ஒரே மனிதன் என்று பல புகழ் பெற்ற ராமஜெயம் செய்த தவறுகள் உங்களுக்கு தெரிந்து தான் நடந்தது என்று சொல்கிறீர்களா Mr.மு(முட்டாள்) கருணாநிதி.
Rate this:
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
20-ஏப்-201310:15:27 IST Report Abuse
தமிழ் குடிமகன் எப்புடி இப்படியெல்லாம் எழுத தோணுது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ...
Rate this:
Cancel
shyam nelatur - Oak Brook,IL-60523,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201306:00:16 IST Report Abuse
shyam nelatur This reveals very clearly as to how the Indian Public is taken on rides by this UPA-II government. At least now, the public should keep these set of CORRUPT politicians out of Power and they should not be allowed to raise their heads once again.Will it ever happen? GOD-HELP INDIA NAD INDIANS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X