பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

Updated : ஏப் 20, 2013 | Added : ஏப் 19, 2013 | கருத்துகள் (4)
Share
Advertisement
பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்:அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவனை போலீசார் சுட்டு கொன்றனர். மற்றொருவன் தீவிரமாக தேடப்பட்டு வருகிறான்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சமீபத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று பேர் பலியாயினர்; 170 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, எப்.பி.ஐ., அதிகாரிகள், தீவிரமாக தேடி வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.மாரத்தான் போட்டி நடக்கும் பாதையில், குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் நீண்ட முடியுடன் தொப்பி அணிந்துள்ளனர். இந்த நபர்களின் பெயர், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திலிருந்து, 10 கி.மீ.,தூரத்தில் உள்ளது வாட்டர்டவுன் பகுதி. இங்குள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப மையத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கும், பாஸ்டன் நகரில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.அந்த வழியாக சென்ற காரை மறித்து தப்பி சென்ற இரண்டு தீவிரவாதிகளையும் போலீசார் துரத்தி சென்றனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொருவன் தப்பி சென்று விட்டான். கார் டிரைவர் காயமின்றி தப்பினார்.தப்பி சென்றவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siva - singapore  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-201307:31:08 IST Report Abuse
siva எதுக்கு எடுத்தாலும் நம்மல நாமே மட்டமா பேசுவது ஒரு போழப்பா
Rate this:
LAX - Trichy,இந்தியா
20-ஏப்-201310:49:27 IST Report Abuse
LAXநிலைமை அப்படி இருக்கும்போது வேறென்ன செய்ய....? அதுபற்றி ஒன்றும் பெருமை பீற்றிக்கொள்ளவில்லையே.. வேதனையை வெளிப்படுத்துவதில் தவறில்லையே.... சமீபத்தில்தான் இதுபோன்ற குற்றத்தில் குற்றவாளியான கசாப்புக்கு, கோடிகள் செலவழித்து கசாப்பு கடையையே ஒவ்வொரு வேளைக்கும் விருந்தாக்கியதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா என்ன?...
Rate this:
Ram Prabhu - Chennai,இந்தியா
20-ஏப்-201316:40:58 IST Report Abuse
Ram Prabhuஇந்தியன் என்று பெருமை பீற்றிக்கொள்வதில் அப்படி எதை சாதித்து விட்டோம்... நமக்கென்ன என்று தானே நாட்களை கடத்தி கொண்டிருக்கிறோம். இந்தியாவை மட்டம் தட்டுவதாக எண்ண வேண்டாம். இங்கு நடந்த நிகழ்வுகளை சற்று அருகில் கண்டவன் நான். உயிரிழப்பை தவிர்க்க பல நகரங்களை இழுத்து மூடி பல வீடுகளை அலசி ஆராய்ந்து விட்டனர்... பாஸ்டன் மக்களின் நம்பிக்கை, ஒற்றுமை, ஒத்துழைப்பு, காவல் துறையின் சிறப்பான செயல்பாடுகள் கண்டு நான் வியந்து விட்டேன். இந்தியன், தமிழன் என்று வெறுமனே மார் தட்டி கொண்டால் மட்டும் போதாது... இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அதிரடி குணங்கள் ஏராளம்... LAX கூறியபடி 2008 நடந்த சம்பவத்திற்கு நாம் ஆற அமர 2012இல் தீர்ப்பு வழங்கினோம்... அதற்குள் ராம் கோபால் வர்மா சம்பவ இடத்தை சுற்றி பார்த்துவிட்டு அதை திரைப்படம் எடுத்துவிட்டார்......
Rate this:
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
20-ஏப்-201302:44:26 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி சபாஷ். இந்தியாவில் அவனை உள்ளே வைத்து பாதாம் அல்வா ஊட்டி விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X