அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் பிரச்னை இந்த ஆண்டு இறுதிக்குள் தீரும் : காலக்கெடுவை நீடித்தார் அமைச்சர்

Updated : ஏப் 20, 2013 | Added : ஏப் 19, 2013 | கருத்துகள் (130)
Share
Advertisement
மின் பிரச்னை இந்த ஆண்டு இறுதிக்குள்  தீரும் : காலக்கெடுவை நீடித்தார் அமைச்சர்

சென்னை : "வரும் ஜூன் மாதத்திற்குள், மின் பிரச்னை தீரும்' என, சட்டசபையில், திரும்ப, திரும்ப கூறிவந்த மின்துறை அமைச்சர், விஸ்வநாதன், நேற்று, ""இந்த ஆண்டு இறுதிக்குள், மின் பிரச்னை தீரும்,'' என, மின் பிரச்னையை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.

சட்டசபையில், தொழில்துறை மானிய கோரிக்கையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசியதாவது:
மின் பிரச்னையால், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில், தேங்காய் நாரில் இருந்து, கயிறு தயாரிக்கும் சிறிய தொழிற் கூடத்தில், வழக்கமாக, 2.5 டன் உற்பத்தி செய்யப்படும். மின் தட்டுப்பாடு காரணமாக, தற்போது, 600 கிலோ மட்டுமே தயாரிக்கின்றனர். கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.கோவைக்கு மட்டும், 890 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், ஒரு, "ஷிப்ட்' கூட ஆலையை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மின்துறை அமைச்சர் விஸ்வநாதன்: புதிதாக, எதையாவது சொல்வீர்கள் என, எதிர்பார்த்தேன். அரைத்த மாவையே அரைக்கிறீர்கள். "மின் பிரச்னை, தற்காலிகமானது; விரைவில், நிரந்தர தீர்வு கிடைக்கும்' என, பலமுறை கூறிவிட்டேன். வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த ஆண்டு இறுதிக்குள், மின் பிரச்னை முடிவுக்கு வரும்.
பாலபாரதி: சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு, தேவையான மின்சாரம் கிடைக்காத நிலையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும், 24 மணி நேரமும், தாராளமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் விநியோகத்தில், இந்த பாரபட்சம் காட்டுவது ஏன்?

தொழில்துறை அமைச்சர் தங்கமணி: புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே, "தடையற்ற மின்சாரம் வழங்குகிறோம்' என்ற அம்சமும் சேர்க்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், மாநிலங்களுக்கிடையே, கடுமையான போட்டி உள்ளது. அதனால், அனுசரித்துபோக வேண்டிய நிலை உள்ளது.மேலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, 240 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என, ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளபோதும், அந்நிறுவனங்கள், 160 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி உள்ளன. இது, வெறும் 1.5 சதவீதம் தான்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANBE VAA J.P. - madurai,இந்தியா
21-ஏப்-201300:20:31 IST Report Abuse
ANBE VAA J.P. அமைச்சரின் இந்த உரைக்கு திருவாளர்கள் செந்தமிழ்.கா .. .சேகர் சேகரன் .,பன்னாடை .,கனகராஜ் .,ஆகியோரின் கருத்துகளை எதிர் பார்க்கின்றோம்
Rate this:
Cancel
vandu murugan - chennai,இந்தியா
20-ஏப்-201322:06:07 IST Report Abuse
vandu murugan மின் பிரச்சினை ஆண்டு இறுதிக்குள் சரியாகிவிடும் ப்ளீஸ் எந்த ஆஅண்டு என்று கேட்காதிர்கள்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-201322:02:22 IST Report Abuse
g.s,rajan நித்தம் நித்தம் இதை சொல்லாமல் ஒரு வரடம் வரை மின்சாரம் தராமல் சமாளித்து விட்டார் .,இதனால் பலருக்கு "ஷாக்" அடிக்கும் கரண்ட் பில் மிச்சம் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X