பதிவு செய்த நாள் :
கருத்துகள் (88)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரணை நடத்திய, பார்லிமென்ட் கூட்டு குழுவான - ஜே.பி.சி.,யின் வரைவு அறிக்கையில், "பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சருக்கு, இந்த முறைகேட்டில் தொடர்பு இல்லை; பிரதமரை, ராஜா தவறாக வழி நடத்தியுள்ளார்' என, கூறப்பட்டுள்ளது, தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

""பிரதமரை, ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்பதை நம்ப முடியாது,'' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி கோபமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ""என் நிலையை, 100 பக்க அறிக்கையாக தயார் செய்துள்ளேன். அதை, ஜே.பி.சி., முன், 22ம் தேதி, தாக்கல் செய்வேன்,'' என, மத்திய தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதேநேரத்தில், இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையில், பார்லிமென்ட் கூட்டுக் குழுவான - ஜே.பி.சி.,யும் நியமிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட, பலரிடமும் விசாரணை நடத்திய, இந்தக் கூட்டுக்குழு, தற்போது வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு, கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கும் முன்னரே, அது மீடியாக்களுக்கு கசிந்துள்ளது.அறிக்கையில், "பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதி அமைச்சர் சிதம்பரத்தையும், மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, தவறாக வழிநடத்தினார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், தி.மு.க.,வுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் முழுவதற்கும், ராஜாவே காரணம் என, குற்றம் சாட்டுவது போல உள்ளது என, நம்பப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில், தி.மு.க., தலைவர், கருணாநிதி நேற்று, அளித்த பேட்டி:

"மத்திய அமைச்சராக இருந்த ராஜா, பிரதமரை, தவறாக வழி நடத்தினார்' என்று சொல்லப்பட்டிருக்கிறதே?

ஒரு பிரதமரை, ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்தினார் என்று சொல்வதை, எப்படி நம்ப முடியும்?
ராஜாவிற்கு, இது தொடர்பாக ஆலோசனை கூறுவீர்களா?
அவர் அந்த துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு தெரியாத ஆலோசனைகளை நான் சொல்வதற்கில்லை. சரியான வழியில், நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை, தமிழக மக்கள் நன்கறிவர்.
கூட்டுறவு தேர்தலை, நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். தேர்தலில் போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கட்சியினர், தேர்தலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே?
நாங்கள் முன்பே உணர்ந்து, புறக்கணித்து விட்டோம். மற்றவர்கள் இப்போது அனுபவப் பூர்வமாக உணர்ந்து, போராட்டம் நடத்துகின்றனர்.இவ்வாறு, கருணாநிதி பதிலளித்தார்.

ராஜா பேட்டி:முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நேற்று மதியம், 1:30 மணிக்கு, டில்லியில் இருந்து, விமானம் மூலம், சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி; கடந்த, 2009ல், என் மீது, சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததில் இருந்து, நான் ஒரு விஷயத்தை, திரும்ப திரும்ப, உறுதியாக கூறி வருகிறேன். அந்த விஷயத்தை, மீண்டும் இப்போதும் கூறுகிறேன்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

Advertisement

விவகாரத்தில், தனிப்பட்ட முறையில், நான் எந்தமுடிவும் எடுக்கவில்லை. பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் கலந்து பேசி, அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே, முடிவு எடுக்கப்பட்டது. அதனால், மொபைல் போன் சேவைக் கட்டணம் வெகுவாக குறைந்து, மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த கருத்தையே இப்போதும் கூறுகிறேன். பார்லிமென்ட் கூட்டுக் குழு அறிக்கையில் என்ன கூறியிருக்கின்றனர் என்று, நான் இன்னமும், முழுமையாக படிக்கவில்லை. அதை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னரே, அதில் என்ன கூறியிருக்கின்றனர் என்பது தெரிய வரும்.என்னை பொறுத்தவரை, என் நிலையை, 100 பக்க அறிக்கையாக தயார் செய்து வைத்துள்ளேன். அதை பார்லிமென்ட் கூட்டுக்குழு முன், வரும், 22ம் தேதி, தாக்கல் செய்கிறேன்.இவ்வாறு, ராஜா கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (88)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201301:49:14 IST Report Abuse
Mujib Rahman நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தை ஜெர்மனி போல மாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21-ஏப்-201300:05:47 IST Report Abuse
GUNAVENDHAN 2 ஜி மெகா ஊழலில் ராசா தன்னிஷ்டப்படி டெண்டர் போட இருந்த கடைசி தேதியை திடீரென முன்னதாக மாற்றி வைக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது, எல்லாம் பிரதமருக்கும் , நிதி அமைச்சருக்கும் தெரிந்து தான் செய்தேன் என்று சாதிக்கின்றாரே, டெண்டர் போட கடைசி தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்த தேதியை திடீரென்று முன்னதாக மாற்றி அவசர அவசரமாக டெண்டர் ஐ முடிக்குமாறு பிரதமர் சொன்னாரா ?. அல்லது, மத்திய நிதி அமைச்சர் தான் சொன்னாரா?. தன்னை காப்பாற்றிக்கொள்ள பிரதமரையும், நிதி அமைச்சரையும் இதில் இழுத்துவிட்டு சந்தடி சாக்கில் தப்பிக்க நினைக்கும் ராசா , இந்த கேள்விக்கு யோக்கியமானவனாக இருந்தால் பதில் சொல்லவேண்டும். முன் தேதியிட்டு டெண்டரை முடிக்க சொல்லி பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ குறிப்பு எதையாவது பைலில் எழுதியுள்ளார்களா ? என்று தெளிவாக ராசா சொல்வாரா ?. அப்படி எதுவும் ஆதாரபூர்வமாக ராசாவால் காட்ட முடியாத பட்சத்தில் ராசா சொல்வது கட்டுக்கதை என்று தான் சொல்லவேண்டும் . அடுத்ததாக , ஒன்றுக்கும் உதவாத உப்புமா கம்பனிகளுக்கு எல்லாம் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார் ராசா என்பது முக்கிய குற்றச்சாட்டு . எல்லாம் பிரதமருக்கு தெரியும் , நிதி அமைச்சருக்கு தெரியும் என்று எதற்கெடுத்தாலும் சொல்லிக்கொண்டிருக்கும் ராசா நியாயவானாக இருந்தால் பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ அந்த உப்புமா கம்பனிகளுக்கு டெண்டரை கொடுக்க சொல்லியிருந்தால் , வெளிப்படையாக சொல்லட்டும் . அப்படி பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ அந்த உப்புமா கம்பனிகளுக்கு சிபாரிசு எதையும் செய்ததாக ராசாவால் நிரூபிக்க முடியாவிட்டால் ராசா சொல்வதெல்லாம் பித்தலாட்டம் தான் என்று முடிவுக்கு வர வேண்டியிருக்கும். சம்பந்தப்பட்ட தொழிலில் எவ்வித அனுபவமும் இல்லாத அந்த உப்புமா கம்பனிகளில் சில வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள அந்த கம்பனிகளுக்கு டெண்டரை கொடுக்குமாறு பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ வற்புறுத்தவில்லை என்றால் தவறு மொத்தத்துக்கும் ராசா தான் காரணம் என்பதும், தன்னுடைய சுய நலத்துக்காக அந்நிய நாட்டு தீவிரவாதிகளுக்கெல்லாம் சலுகை காட்டியுள்ளதாக ராசா மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை தவிர சொல்ல ஏதுமில்லை . அடுத்ததாக பால்வாவிடமிருந்து , அதாவது பால்வா கம்பனியில் இருந்து கருணாநிதியின் மனைவியும், மகளும் பெரும் பங்கை வைத்துள்ள கலைஞ்சர் குடும்பத் தொலைக்காட்சிக்கு இருநூற்றி சொச்சம் கோடிகள் வந்ததே அதையும் ராசா பிரதமருக்கும் , நிதி அமைச்சருக்கும் தெரிந்தே தான் செய்தாரா ? பால்வா என்ன கருணாநிதிக்கு மாமனா ? மச்சானா ?. சும்மா இருநூற்றி சொச்சம் கோடிகளை அள்ளி வீசுவதற்கு எல்லாம் பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தெரிந்து தான் செய்தேன் என்று கிளிப்பிள்ளை சொல்வது போல , திரும்ப திரும்ப தேய்ந்து போன ரெகார்ட் பிளேயர் போல சொல்லிக்கொண்டிருக்கின்றாரே , அவர் சொல்வது உண்மையென்றால் பிரதமருக்கும் , நிதி அமைச்சருக்கும் தெரிந்து தான் பால்வவிடமிருந்து அந்த பெருந்தொகையை கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிக்கு திருப்பி விட்டாரா ? என்பதை சொல்லவேண்டும் . நான் இங்கு கேட்டுள்ள இந்த சாதாரணமான கேள்விகளுக்கு தான் தமிழக மக்களும் விடை தேடிக்கொண்டிருக்கின்றார்கள், எனவே ராசா இனியும் மழுப்பலான பதில்களை சொல்லியே காலத்தை கடத்திடலாம் என்று எண்ணாமல், உடனே இதற்கெல்லாம் நறுக்கென்று உண்டு இல்லை என்று பதில் சொல்ல வேண்டும், தொடர்ந்து மழுப்பலான பதில்களை சொல்லிக்கொண்டிருந்தால், ராசா செய்ததெல்லாம் அய்யோக்கியத்தனமான வேலைகள் தான் என்று முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201322:06:56 IST Report Abuse
Pugazh V @ நல்லவன் : புகழ் 7 கருத்துக்கள் எழுதினேன். போடமாட்டேங்கறாங்க. 1. பி ஜே பி ஆட்சியில் 40,000 கோடி அரசுக்கு இழப்பு. 2. சி ஏ ஜி சொன 1.76 லட்சம் மடத்தனமான தொகை.3. ராஜாவை விசாரிக்காமலே அறிக்கை தயாரித்தது சரியில்லை.4. 3ஜி, 4 ஜி யில் கூட ராஜா மூலம் கிடைத்த தொகை கிடைக்கவில்லை.5. கனிமொழி அவர்கள்பற்றி ஜே பி சி அறிக்கையில் எதுவும் இல்லை. இந்த விவரங்களை ஊடகங்கள் மறைக்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
20-ஏப்-201321:56:32 IST Report Abuse
amukkusaamy திமுக கொடாக்கண்டனாக இருக்கலாம். காங்கிரஸ் விடாக்கண்டன். அவர்கள் தனியாக தண்ணீரில் மூழ்கி சாக மாட்டார்கள். கட்டுமரம் கவிழ்வது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
20-ஏப்-201321:54:58 IST Report Abuse
amukkusaamy காங்கிரசை "கை" கழுவியதாக நீங்கள் நினைக்கலாம் மு.க அவர்களே...உங்கள் குடும்பத்தார் எல்லாரின் குடுமியும் காங்கிரசின் "கையில்" இருக்கு. திரும்ப அவங்க கால்ல விழறத தவிர வேற வழியில்ல Mr.மஞ்சத்துண்டு.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
20-ஏப்-201321:52:36 IST Report Abuse
amukkusaamy கேப்பையில நெய் வடியுதாம் ...
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
20-ஏப்-201321:52:09 IST Report Abuse
amukkusaamy இவரு உலக மகா உத்தமரு ...சொன்ன சொல் தவறாத சத்தியவான் ...இவரோட கட்சி மந்திரி எல்லாம் பரம யோக்கியர்கள் ..அதானாலதான் 9 வருஷமா ஏமாந்து போயி இப்போ வெளில வந்துருக்காரு ...நாங்க எல்லாரும் சத்தியமா நம்பிட்டோமுள்ள சாமி ..
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-201320:44:21 IST Report Abuse
g.s,rajan சரியான முறையில் தான் வழிகாட்டினாரா ?மாட்டிக்கொண்டுவிட்டாரே ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
20-ஏப்-201320:35:36 IST Report Abuse
Tamilselvan முதலில் கோடி கோடி கொள்ளை அடித்த ராஜா,ராணி,கேடி ப்ரோதேர்ஸ்,மஞ்சள் துண்டு கும்பலை தண்டிக்க வேண்டும். இவர்கள் தவறு செய்யதது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. அது இந்திய மக்கள் எல்லோருக்கும் தெரியும்.எந்த திட்டத்திலும் குடும்பத்தோடு கொள்ளை அடிப்பது,பதவிக்காக எதையும் செய்வது,இவையெல்லாம் நமது மஞ்சள் துண்டு கும்பலின் கொள்கைகள். இந்த விஞ்ஞான திருடர்கள், தன்னலம் பார்க்காத இன்றைய இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மூல காரணமான மன்மோகன் சிங்க் மீது குற்றம் சாட்டுவது வேடிக்கை. இந்த குற்றசாட்டை முன்பு ஏன் தெரிவிக்க வில்லை? கடைசி வரை அட்டை போல பதவியில் ஒட்டி கொண்டு,இப்போது வேலையில் வந்து உத்தமர் போல நடிப்பது நமது மஞ்சள் துண்டு கும்பலின் வழக்கமான செயல். முதலில் கையும் களவுமாக பிடிபட்ட திருடர்களை தண்டிபோம்.அதன் பின் மற்றவர்களை பார்க்கலாம். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை இந்திய அரசியலை சுத்தம் செய்யும் முதல் படி
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
20-ஏப்-201315:36:05 IST Report Abuse
T.C.MAHENDRAN கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு பெற்று ,பிரதமர் ,சோனியா காந்தியையே ""பிளாக் மெயில்"" செய்து அனைத்து சுகங்களையும் அனுபவித்த தி.மு.க. தான் முதல் குற்றவாளி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X